×

முதல்வர் பதவியை ஏலம் எடுத்த எடப்பாடி: முத்தரசன் தாக்கு

``முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி ஏலம் எடுத்துள்ளார். அதில் அவர் லாபம் சம்பாதிக்கிறார்’’ என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்து இருக்கிறார்.தஞ்சை நாடாளுமன்ற தொகுதி, சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.  அப்போது அவர் பேசியதாவது:மாநில அரசுக்கு எதிராக கருத்து சொல்கிறவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூறும் தமிழக அரசை சர்வாதிகார அரசு என்றுதான் கூற வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து  குறும்படம் வெளியிட்ட சமூக ஆர்வலர் முகிலனை ஒரு மாதமாக காணவில்லை. மீத்தேன் திட்டம் உள்ளிட்ட திட்டத்துக்கு எதிராக துண்டு பிரசுரம் வெளியிட்ட மாணவி வளர்மதி மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டது. மே 17  இயக்க தலைவர் திருமுருகன்காந்தி கைது செய்யப்படுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மீது வழக்கு போடப்பட்டது.

வழக்குகளை கண்டு நாங்கள் அஞ்சுவதில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது பிரதமர் வந்து ஆறுதல் கூறவில்லை. எல்லோரும் கண்டனம் தெரிவித்த பின்னர் முதல்வர் பழனிச்சாமி, ஹெலிகாப்டரில் வந்து பாதியில் திரும்பி சென்றார். தமிழக அரசு கேட்ட நிதியை கூட  மத்திய அரசு வழங்கவில்லை. தேர்தல் ஆணையமும் மத்திய அரசுக்கு அடிபணிந்து செயல்படுகிறது. நாங்கள் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்துமாறு கேட்கிறோம். ஆனால் தேர்தல் ஆணையம்  18 தொகுதிக்குதான் இடைத்தேர்தல் நடத்துகிறது. தமிழகத்தில் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி ஏலம் எடுத்துள்ளார். அதில் அவர் லாபம் சம்பாதிக்கிறார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Edappadi ,assault ,Mutharasan ,Chief Minister , Chief Minister's , The bidder ,Mutharasan attack
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்