×

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தரமான சம்பவம் செய்த சன் ரைசர்ஸ்..!

* சன் ரைசர்ஸ் அணியின் பரிஸ்டோவ்,வார்னர்  சதம்  விளாசினார்..!
* பந்து வீச்சில் நபி சிறப்பு..!
*  118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஹைதராபாத் : ஐபிஎல் 2019 தொடரின் இன்றைய முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக  டாஸ் வென்ற  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் கோலி முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனை தொடர்ந்து சன் ரைசர்ஸ் அணி களமிறங்கியது. துவக்க  வீரர்களாக களமிறங்கிய பரிஸ்டோவ்,வார்னர் பெங்களூரு அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 16.2 ஓவர்களில் 185 ரன்களை குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 231 ரன்களை எடுத்தது.

alignment=


சன் ரைசர்ஸ் அணி சார்பில் பரிஸ்டோவ் 56 பந்துகளில் 7 சிக்ஸ்கள் மற்றும் 12 பௌண்டரிகளுடன் 116 ரன்களை குவித்தார், சிறப்பாக விளையாடிய வார்னர் 55 பந்துகளில் 5 சிக்ஸ்கள்  மற்றும் 5 பௌண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு அணி சார்பில் சாஹல் 4 ஓவர்களில் 44 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

alignment=


232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. பெங்களூரு அணி சார்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய பார்திவ் படேல் 8 பந்துகளில் 11 ரன்களையும், ஹெட்மேயேர்  9 ரன்களையும் எடுத்து முகம்மது நபி பந்தில் ஆட்டமிழந்தனர். அதிரடி ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ் 1ரன் எடுத்த நிலையில் நபி பந்தில் போல்டானர். பெங்களூரு அணியின் கேப்டன் கோலி 3 ரன்கள் எடுத்து சந்தீப் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

alignment=


சன் ரைசர்ஸ் அணி சார்பில் முகம்மது நபி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார். 4 ஓவர்கள் பந்துவீசிய நபி 11 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். சந்தீப் சர்மா 3 விக்கெட்டையும்  வீழ்த்தி வெற்றிக்கு உதவினார்.

alignment=


3 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை சன் ரைசர்ஸ் அணி பதிவு செய்துள்ளது. பெங்களூரு  அணி விளையாடிய  3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Royal Challengers Bangalore ,Sunrisers , IPL 2019,Sunrisers Hyderabad,Royal Challengers Bangalore ,SRH,RCB
× RELATED 1 ரன் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ்...