×

கோவாவில் பாஜ.வுக்கு தாவிய மனோகர் அஜ்கன்கருக்கு துணை முதல்வர் பதவி

பனாஜி: கோவாவில் பாஜ.வுக்கு தாவிய கூட்டணி கட்சி எம்எல்ஏ.வான மனோகர் அஜ்கன்கருக்கு துணை முதல்வராக பதவி வழங்கப்பட்டுள்ளது. கோவாவில் பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக இருந்த மனோகர் பரிக்கர் இறந்த பிறகு, முதல்வராக பிரமோத் சவாந்த் பதவியேற்றார்.  துணை முதல்வராக மகாராஷ்டிரவாதி கோமந்த் கட்சியை (எம்ஜிபி) சேர்ந்த தவாலிகர் இருந்து வந்தார்.  கூட்டணி தர்மத்தை மீறியதாக கூறி நேற்று அவரை துணை முதல்வர் பதவியில் இருந்து முதல்வர் சவாந்த் நீக்கினார். இந்த நிலையில் எம்ஜிபி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.க்கள் அஜ்கன்கர், தீபக் பவாஷ்கர் ஆகியோர் தங்கள் கட்சியில் இருந்து பிரிந்து பாஜ.வுடன் இணைந்தனர். இதையடுத்து மனோகர் அஜ்கன்கரை துணை முதல்வராக சவந்த் நியமித்துள்ளார். ஏற்கனவே, இம்மாநிலத்தில் விஜய் சர்தேசி துணை முதல்வராக இருக்கிறார். அவருடன் அஜ்கன்கரும் துணை முதல்வராகி இருக்கிறார். இவருக்கு மாநில விளையாட்டு மற்றும் சுற்றுலாத் துறை வழங்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manohar ,Goa ,Deputy Chief Minister ,Azkankar , Goa, Bhaj, Manohar Ajkankar, Deputy Chief Minister
× RELATED மாஜி அரியானா முதல்வர் கட்டார் வேட்புமனுதாக்கல்