×

சென்னையில் வருமான வரித்துறை அதிரடி சோதனை கான்ட்ராக்டரிடம் ரூ.15 கோடி பறிமுதல்

* தேர்தலுக்காக பதுக்கிய அமைச்சரின் பினாமி பணம்?

சென்னை: சென்னை மாநகராட்சி கான்ட்ராக்டரிடம் இருந்து ரூ.15 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அமைச்சரின் பினாமியாக செயல்பட்டுவரும் இவர், தேர்தலுக்காக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சபேசன்.  தற்போது சென்னை நங்கநல்லூரில் வசித்து வருகிறார். அம்பத்தூரில் இவரது தொழிற்சாலை உள்ளது. தமிழகத்தில் செல்வாக்காக இருக்கும் மூத்த அமைச்சர் ஒருவரின் பினாமியாக இவர் இருப்பதாக கூறப்படுகிறது. இவரது வீட்டில் தேர்தல் செலவுக்காக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
 தேர்தல் நேரத்தில் பண நடமாட்டத்தை தடுக்க வருமான வரித்துறை தனிப்படை அமைத்துள்ளது. இதனால் வருமான வரித்துறை தலைமை இயக்குநர் முரளிகுமார் தலைமையிலான தனிப்படையினர், நேற்று மாலை அதிரடியில் இறங்கினர். நங்கநல்லூரில் உள்ள சபேசனின் வீடு, அலுவலகம், நண்பர்களின் வீடு, அலுவலகம் என்று 10 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் வீடு மற்றும் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்ததும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பணம் எண்ணும் மிஷினை தேடினர். அப்போது, சபேசனின் வீட்டிலும், அலுவலகத்திலும் ரூபாய் நோட்டு எண்ணும் மிஷின் இருந்தது. அவற்றின் மூலம் பணத்தை அதிகாரிகள் எண்ணினர். அப்போது, ரூ.15 கோடி ரொக்கம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் சிக்கின. இந்த தகவல் உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் வந்து இந்த சோதனையை பார்வையிட்டனர்.

இந்தப் பணம் தேர்தல் செலவுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பணத்தை வெளியில் கட்சிக்காரர்களிடம் கொடுப்பதற்கு முன்னர் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தேர்தல் நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபேஷ், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் மின்துறை பிரிவுக்கான அனைத்து வேலைகளையும் எடுத்து செய்து வந்துள்ளார். பல ஆண்டுகளாக இவருக்கு இந்த கான்ட்ராக்ட் வழங்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் செல்வாக்காக உள்ள ஒரு மூத்த அமைச்சரின் பினாமி என்பதால் பல ஆண்டுகளாக அவருக்கு கான்ட்ராக்ட் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஒப்பந்தத்திலும் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான ஏராளமான ஆவணங்களும் வருமான வரித்துறையில் சிக்கியுள்ளன. குறிப்பாக மாநிலம் முழுவதும் அவர் எடுத்துள்ள டெண்டர் மற்றும் அமைச்சருக்கு வழங்கப்பட்ட நிதி, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட மாமூல் ஆகியவை குறித்த ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. சோதனையின்போது சபேஷ் வீட்டில் இருந்தார். இதனால், இந்த பணம் தேர்தல் செலவுக்காக அமைச்சர் சொல்லும் ஆட்களிடம் கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், அவரிடம் தீவிர விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

மேலும் ஏற்கனவே பணம் எவ்வளவு கடத்தப்பட்டு, யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது அல்லது இனிமேல்தான் கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா என்பது குறித்தும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது 3 மூத்த அமைச்சர்களின் பினாமியாக இருந்த அன்புநாதனின் கரூர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம் சிக்கியது. இந்த சோதனைக்கு முன், ஏராளமான பணம் ஆம்புலன்ஸ் மூலம் தமிழகம் முழுவதும் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. தற்போதும் இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் கட்சியினர் மாநிலம் முழுவதும் பணத்தை ஒவ்வொரு தொகுதிக்கும் கடத்திச் சென்று இருப்பதாக கூறப்பட்டது. இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். தற்போது ரூ.15 கோடி சிக்கியுள்ளது. இதனால் சபேசனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பேரவை தேர்தலின்போது 3 மூத்த அமைச்சர்களின் பினாமியாக இருந்த அன்புநாதனின் கரூர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஏராளமான பணம் ஆம்புலன்ஸ் மூலம் தமிழகம் முழுவதும் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. தற்போதும் ஆளும் கட்சியினர் மாநிலம் முழுவதும் பணத்தை கடத்திச் சென்று இருப்பதாக கூறப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai , Income Tax Department, Chennai, contractor
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?