×

60 வயது முனியாண்டிக்கு ஆதார் அட்டை ரெடி: இந்த தேர்தலிலாவது ஓட்டுப் போடுவாரா?

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையை சேர்ந்தவர் முனியாண்டி(60). இவருக்கு இதுவரை எந்தவிதமான அடையாள அட்டையும் இல்லாத காரணத்தினால் இதுவரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க முடியாத நிலை இருக்கிறது. இது தொடர்பான செய்தி தமிழ்முரசு நாளிதழில் வெளியானது. இதற்கிடையே முனியாண்டி  கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மனுப்பெட்டி முன் மீண்டும் கோரிக்கை மனுவை போட்டார். இந்த மனு உடனடியாக அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டது. கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்திற்கு நேற்று தனித் துணை ஆட்சியர் ஸ்ரீகிருஷ்ணன் வந்து முனியாண்டியை கிராம உதவியாளர்கள் மூலம் பைக்கில் அழைத்து வந்து விசாரனை நடத்தினார். அப்போது ஆர்ஐ லதா, விஏஓ கருப்பையா உடன் இருந்தனர். அப்போது முனியாண்டி இதுவரை தான் ஓட்டுபோட்டதில்லை.

வாக்காளர் பட்டியலில் சேருவதற்கான எந்த ஆவணமும்  தன்னிடம் இல்லை என்று கூறினார். அதைத்தொடர்ந்து முனியாண்டியை அங்குள்ள இ-சேவை மையத்தில் ஆதார் அட்டை எடுக்க நடவடிக்கை எடுத்தனர். விரைவில் அவருக்கு ஆதார் அட்டை கிடைத்துவிடும். அதன்பிறகு அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இந்த தேர்தலிலேயே முனியாண்டி வாக்களிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Muniyandi ,election , Muniyandi, Aadhaar Card, Ready
× RELATED முதியவர் மீது தாக்குதல்