×

அதிமுகவினரே வாங்கிக்குறாங்க... கூலிங் பீரே கிடைக்கலை ‘குடிமகன்கள்’ டென்ஷன்

தேர்தல் களத்தில் மட்டுமல்ல... தமிழகத்திலும் அனல் பறக்கிறது. பல கட்டணி வைத்து போட்டியிடுவதால் அதிமுக வேட்பாளர்களுடன் எப்போதும் பல கட்சி தொண்டர்கள் கூடவே  வருகின்றனர். கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதியிலும் அதிமுக பிரமுகர்களே பணம், சரக்கு, பிரியாணி உள்ளிட்ட அயிட்டங்களை வாங்கித்தர வேண்டியிருக்கிறதாம்.‘‘கூட்டணி கட்சியில தொண்டர்களைத்தான் பார்க்க முடியுது. அந்த கட்சியின் மாவட்ட, நகர செயலாளர்கள் வரவே மாட்டேங்குறாங்க. வந்தா செலவழிக்கணும்னு பார்க்கிறாங்க போல.. எப்ப  பார்த்தாலும் நாங்களே கைக்காசை போட்டு செலவழிக்க வேண்டியிருக்கு...’’ என அதிமுக வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தரப்பு புலம்பி தவிக்கிறாங்களாம்.அதுலயும் வெயில்  கொளுத்தி எடுப்பதால், கண்டிப்பாக கூலிங் பீர்தான் வேண்டுமென அடம் பிடிக்கிறாங்களாம். கோடைக்காலத்துல கூரை ஏறி கோழி கூட பிடிச்சுடலாம். டாஸ்மாக் கடையில கூலிங் பீர்  கிடைக்கிறதுதான் ரொம்ப கஷ்டம். இதனால் மொத்தமாக ஆர்டர் பண்ணிட்டு டோக்கனை வாங்கி கொடுத்திடுறாங்களாம்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக்  கடைகளிலும் பீர் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாம்.

மேலும், தமிழகம் முழுவதும் 25 சதவீத அளவுதான் கூலிங் பீர் கிடைக்கிறதாம். இல்லாவிட்டால் தனியார் பார்களுக்குதான் செல்லவேண்டும். இதனால் தனியார் பார் வைத்துள்ள  ஆளுங்கட்சியினர் காட்டில் விற்பனை மழை பொழிகிறது.ஆளுங்கட்சியினர் தங்களது தலைவர்கள் வரவேற்புக்கு செல்லும்போது அட்வான்சாகவே பெட்டி, பெட்டியாக வாங்கி  வைத்துகொண்டும், குடித்துவிட்டு சாலையில் குத்தாட்டம் போடுவதும் அதிகரித்துள்ளதாம்... இதனால எங்களுக்கு கூலிங் பீரே கிடைக்க மாட்டேங்கிறது என ‘குடிமகன்கள்’  புலம்புகிறார்களாம்...!



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cooler Pierre ,citizens , builder, Cooling , available,'Citizens', tension
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...