×

டெபாசிட்டுக்கு கொஞ்சம் கம்மியா இருக்கு ‘300 ரூவா கைமாத்தா கொடுங்க சார்...’: தேர்தல் அதிகாரியிடம் ம.நீ.ம வேட்பாளர் கெஞ்சல்

தென்காசி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி மாற்று வேட்பாளர் டெபாசிட் தொகை குறைந்ததால், தேர்தல் அதிகாரியிடம் ₹300 கேட்டு கெஞ்சினார். இதனால்  தேர்தல் அலுவலகம் கலகலத்தது.தென்காசி தொகுதிக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.  வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று முன்தினம் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிவகாசி சாட்சியாபுரம் ரோட்டை சேர்ந்த முனீஸ்வரன் தென்காசி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல்  செய்ய நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இவருடன்  மாற்று வேட்பாளர் கோவில்பட்டி வள்ளுவர் நகர் முதல் தெருவை சேர்ந்த வெங்கடேஷ்வரனும் வந்தார்.
நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்து ராமலிங்கத்திடம் மனு தாக்கல் செய்ய சென்றனர்.

தேர்தல் அலுவலர் மனுக்களை வாங்கி பார்த்துவிட்டு வேட்பு மனுவை பூர்த்தி செய்து  புகைப்படங்கள் ஒட்டி, டெபாசிட் தொகை ₹12 ஆயிரத்து 500ம் கொண்டுவர வேண்டும் என்றார். அப்போது மாற்று வேட்பாளரான வெங்கடேஷ்வரன், சார் ₹300 குறைகிறது. நீங்கள் தாருங்கள். மனு தாக்கல் செய்து விட்டு கீழே சென்று வாங்கி வந்து தருகிறேன் என தேர்தல் அலுவலரிடம்  ெகஞ்சியுள்ளார். ஆனால் அதற்கு நீங்கள் தான் டெபாசிட் தொகையை கொண்டு வர வேண்டும் என தேர்தல் அலுவலர் கூற அந்த இடம் கலகலப்பானது. பின்னர் நீண்ட நேரத்துக்குபின் ஒருவழியாக எங்கேேயா  பணத்தை புரட்டி வந்து, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் முனீஸ்வரன், மாற்று வேட்பாளர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : GAMMIA ,Candidate Kennel , Deposits, Little Kammiya,,300 rupees ,kimatta,Election Candidate, M.N. Candidate
× RELATED மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசி மூலம்...