×

மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசி மூலம் அமித்ஷா மிரட்டியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகார்

டெல்லி: வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் 150 மாவட்ட ஆட்சியர்களுடன், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் பேசிய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசி மூலம் அமித்ஷா மிரட்டியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகார் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டு தொடர்பாக விரிவான தகவல், ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு ஜெய்ராம் ரமேஷ்க்கு, இந்திய தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.

ஆதாரங்களை தர ஒருவார காலம் அவகாசம் கேட்ட ஜெய்ராம் ரமேஷ், தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது. ஜெய்ராம் ரமேஷ், இன்று இரவு 7 மணிக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளார்.

சுமார் 150 நாடாளுமன்றத் தொகுதிகளின் மாவட்ட நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற உங்கள் குற்றச்சாட்டு, நாளை நடைபெறவிருக்கும் வாக்கு எண்ணும் செயல்முறையின் புனிதத்தன்மையில் தீவிரமான அர்த்தத்தையும் நேரடித் தாக்கத்தையும் கொண்டுள்ளது. 02.06.2024 தேதியிட்ட கமிஷன் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி, நீங்கள் கூறியது போல் எந்த ஒரு DM யும் இதுபோன்ற தேவையற்ற செல்வாக்கைப் புகாரளிக்கவில்லை.

எனவே, ஆணைக்குழு இதன்மூலம் கால நீட்டிப்புக்கான உங்கள் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்து, உங்கள் குற்றச்சாட்டின் உண்மை அணி/அடிப்படையுடன் இன்று (03.06.2024) 7 மணிக்குள் உங்கள் பதிலைத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்துகிறது.

The post மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசி மூலம் அமித்ஷா மிரட்டியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகார் appeared first on Dinakaran.

Tags : Senior ,Congress ,Jairam Ramesh ,Amit Shah ,District Collectors ,Delhi ,Union Minister ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு தேவையா என்பது பற்றி...