×

ஒய்எஸ்ஆர் காங்கிரசின் ‘பை பை பாபு’ கடிகாரம்

தேர்தல் நெருங்க நெருங்க வாக்காளர்களை எப்படி கவர்வது என்று அரசியல் கட்சிகள் புதுப்புது உத்திகளை கையாண்டு வருகின்றன. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் திங்களன்று தேர்தலை கருத்தில் கொண்டு டிஜிட்டல் கடிகாரம் ஒன்றை மக்கள் பார்க்கும் வகையில் அமராவதியில் கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்துள்ளனர். “பை பை பாபு” என்று ஒளி விளக்கில் அதை அமைத்துள்ளனர். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அரசின் பதவி காலம் (நேரம்) எவ்வளவு மிஞ்சி உள்ளது என்பதைக் காண்பிக்கும் வகையில் நேரத்தை கணித்து அந்த கடிகாரத்தில் வைத்துள்ளனர். “இந்த டிஜிட்டல் கடிகாரம், ஆந்திராவில் ராம ராஜ்யம் (ஆட்சி) ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் எப்போது அமையப் போகிறது என்பதை குறிக்கும் வகையில் நேரம் கணித்து வைக்கப்பட்டுள்ளது” என்று கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜசேகர் தெரிவித்தார்.

“ஜெகன் மோகன் ரெட்டி கடப்பா மாவட்டம் புலிவெந்துலா சட்டசபை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரது வெற்றி உறுதி. 175 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபைக்கு ஏப்ரல் 11ல் மக்களவை தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடக்கிறது. மாநிலத்தில் அரசுக்கு எதிரான அலை வீசுகிறது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எளிதில் வெற்றி பெறும்’’ என்றும் அவர்  நம்பிக்கையுடன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : YSR Congress ,Bye ,Babu , YSR Congress
× RELATED தேர்தல் பிரசாரத்தில் ஒய்எஸ்ஆர் காங்....