×

விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்து ; 3 பேர் காயம்

சென்னை : சென்னை அருகே விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனிடையே விபத்துக்குள்ளானவர்களுக்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தரவில்லை என விஜிபி பொழுதுபோக்கு பூங்காவின் நிர்வாகம் மீது பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில், ரோலர் கோஸ்டரில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 9 வயது சிறுவன் உள்பட மூன்று பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

ரோலர் கோஸ்டர் வாகனங்கள் ஒன்றின் மீது மற்றொன்று மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே விபத்து ஏற்பட்டதும் பூங்கா நிர்வாகம் ஆம்புலன்ஸ் வசதி செய்துகொடுக்கவில்லை  என்றும், விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்களே ஆம்புலன்ஸை அழைத்து பின்னர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலை போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : crash accident ,entertainment park ,VGP , Wheel, vgb, entertainment, accident
× RELATED ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி...