×

DRDO-க்கு பாராட்டு, பிரதமர் மோடிக்கு உலக நாடக மேடை தின வாழ்த்து : ராகுல் கிண்டல்

டெல்லி: விண்வெளி சாதனை நிகழ்த்திய டிஆர்டிஓவிற்கு காங்கிரஸ் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கு உலக நாடக மேடை தின வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தை தொடர்ந்து, ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் பேட்டிளித்தபோது, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு மாதந்தோறும்  குறைந்தபட்ச  வருமானமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். ஏழ்மை நிலையில்  உள்ளவர்களில் 20  சதவீதம் பேர் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் பெறுவார்கள். இதன் மூலம் 5 கோடி  குடும்பங்கள் பயனடையும். இந்த திட்டத்தின் மூலம் 25 கோடி பேர் நேரடியாக  பயன்பெறுவார்கள். வறுமைக்கு எதிரான இறுதி  தாக்குதல் தொடங்கியுள்ளது. நாட்டை விட்டு வறுமையை நாங்கள் ஒழிப்போம் என்று தேர்தல் அறிக்கையாக தெரிவித்தார்.

இதனையடுத்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை என்னவாக இருக்கும் என நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இதற்கிடையே, இன்று 11:45-12:00 மணிக்கு நாட்டு  மக்களிடம் உரையாற்ற உள்ளேன். அப்போது, முக்கிய தகவல்களை தெரிவிக்க உள்ளேன், அதனை அனைவரும் டிவி, ரேடியோ, ஊடகங்கள் மூலம் கவனிங்கள் என்று தனதுட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அறிவித்த நேரத்தை விட சற்று தாமதமாக பேச்சை துவக்கிய பிரதமர் நமது  நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மிஷன் சக்தி சோதனை இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர,  பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல என்றார். விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.


எதிர்கட்சிகள் கண்டனம்:

பாதுகாப்பு துறை தொடர்பான பிரதமர் மோடியின் அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த சமயத்தில் பிரதமரின் பாதுகாப்பு துறை குறித்த அறிவிப்பு தேர்தல் விதிகளை மீறியதாகும் என குற்றம்சாட்டி உள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக சில கட்சிகள் நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஆனால், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அறிவிப்புக்களை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டியதில்லை என தேர்தல் ஆணைய வட்டராரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DRDO ,Modi on World Drama Day ,Rahul Kundal , Space adventure, Rahul Gandhi, Modi
× RELATED பிரமோஸ் ஏவுகணையை இந்தியா தயாரிப்பது ஏன்? ராஜ்நாத் சிங் பேச்சு