×

வால் குரட்டை பழ சீசன் துவக்கம் : தொட்டபெட்டாவில் பார்க்கலாம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட தாட்பூட் (வால் குரட்டை) பழங்கள் சீசன் துவங்கிய நிலையில் தொட்டபெட்டா காடுகளில் தற்போது இந்த பழங்கள் காய்த்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனங்களில் காணப்படும் பல்வேறு வகையான பழங்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. குறிப்பாக நாவல் பழம், தவிட்டு பழம், பிக்கி பழம், ஸ்ட்ராபெரி மற்றும் தாட்பூட் பழம் எனப்படும் வால் குரட்டை வகை பழங்கள் அதிகளவு காணப்படுகிறது. இவற்றை பறவைகள், விலங்குகள் மட்டுமின்றி பொது மக்களும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இவற்றில் ஒரு சில பழங்கள் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. தொட்டபெட்டா பகுதிகளில் உள்ள மரங்களில் படர்ந்துள்ள கொடிகளில் தற்போது தாட் பூட் பழங்கள் அதிகளவு காணப்படுகிறது. இதன் கொடிகள் கற்பூர மரங்கள், காட்டு மரங்கள் என அனைத்து மரங்களிலும் வளர்ந்து பரவி விடுவதால், இவைகளில் விளையும் பழங்களை விலங்குகள் மற்றும் பறவைகள் விரும்பி உண்ணும். இதில், வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ சத்து அதிகளவு உள்ளது. மேலும், இந்த பழங்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடியது. பொதுவாக இந்த பழங்கள் நீலகிரி காடுகளில் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்த பழங்கள் குறித்து விவரம் அறிந்தவர்கள், இவைகளை பறித்து உட்கொள்கின்றனர். சிலர் இதனை வியாபார ரீதியாகவும் பயன்படுத்துகின்றனர். ஊட்டியில் உள்ள பழக்கடைகளில் கூட இப்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tail Cold Fruit Season , Tail creep fruit, season, dhotapeta
× RELATED அறிவுப் புரட்சிக்கு நாம்...