×

மக்களுக்கு மாற்றம் தேவைப்படுகிறது: நடிகை ரோகிணி

1. உங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களுக்கு மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது? மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறேன். நான் எளிய மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். அவர்களுக்கு மாற்றம் தேவைப்படுகிறது. இதற்குமுன்பாக எத்தனையோ வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. கொரோனா நேரத்தில் விலைவாசி அதிகமாகியது. மக்களின் வருவாயும் குறைந்திருக்கிறது. ஆனால், இப்போது இலவச கேஸ் சிலிண்டர் தருகிறோம் என்கிறார்கள். முக்கியமாக படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்பது பிரச்னையாக இருக்கிறது. 2. பத்தாண்டுகால அதிமுக ஆட்சி எப்படி இருந்தது?பத்தாண்டு கால ஆட்சியில் என்ன நடந்தது என்பது குறித்து எதுவும் தெரியாத அடித்தட்டு மக்களை சந்தித்தே நான் பேசி வருகிறேன். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்பதை பார்க்க முடிகிறது. கோவில்பட்டி பகுதி மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. 3. பெண்கள் மற்றும் மாணவர்களின் வாழ்வு முன்னேற்றம் அடைந்திருக்கிறதா? நான் கயத்தார், கழுகுமலை ஆகிய இடங்களுக்கு சென்றேன். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தொழில்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சிறு, குறு தொழில்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கேஸ் சிலிண்டர் விலையும் ஏற்றப்பட்டு இருக்கிறது. கேஸ் சிலிண்டரை விட்டுவிட்டு விரகு அடுப்புக்கு மாறும் நிலையில் பெண்கள் உள்ளனர். அன்றாடம் குடும்பத்தை சமாளிப்பதே அவர்களுக்கு பெரும் சிரமமாகி இருக்கிறது. இதேபோல், புதிய கல்விக்கொள்கையில் 3,4,5ம் வகுப்புக்கு பொதுத்தேர்வுவை அறிவித்திருக்கிறார்கள். ஆனால், அதுகுறித்து மக்களுக்கு எதுவும் தெரியவில்லை. பட்டப்படிப்பு, நர்சிங் ஆகியவற்றிற்கும் நுழைவுத்தேர்வை கொண்டுவருவதாக சொல்லி இருக்கிறார்கள். இது மாணவர்களின் கல்வித்திறனுக்கு பாதிப்பை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. 4. மக்கள் எதை விரும்புகிறார்கள்? யார் வந்தாலும் எங்களுக்கான அடிப்படை வசதியை செய்து தரவேண்டும். வாழ்வாதாரத்திற்கு தேவையானவை உடனடியாக கிடைக்க வேண்டும் என்றே மக்கள் நினைக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் எந்தெந்த பகுதியில் போட்டியிடுகிறார்களோ அந்த பகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. …

The post மக்களுக்கு மாற்றம் தேவைப்படுகிறது: நடிகை ரோகிணி appeared first on Dinakaran.

Tags : Roginy ,Marxist Party ,Rokini ,
× RELATED தமிழைப்பற்றி பேசி தமிழர்களை ஏமாற்றப்...