×

கழிவுநீர் தொட்டியை எட்டிப்பார்த்தபோது விபரீதம் விஷவாயு தாக்கியதில் தந்ைத, 2 மகன்கள் உள்பட 6 பேர் பலி

* அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்
* ஆண்கள் இல்லாத குடும்பமாக மாறிய அவலம்
* ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக எட்டிப் பார்த்தபோது திடீரென விஷவாயு தாக்கியதில் தந்தை, 2 மகன்கள் உள்பட 6 பேர் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அந்த குடும்பத்தில் ஆண் வாரிசுகளே இல்லாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் விநாயகா நகர் நெமிலி சாலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (54). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி லதா (42). இவர்களது மகன் கண்ணன் (23), அதே பகுதியில் குளிர்பான கடை நடத்தினார். மற்றொரு மகன் கார்த்தி (21), மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். கிருஷ்ணமூர்த்தி, தனது வீட்டுடன் மேலும் 3 வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீடுகளில் 20க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி வீட்டின் கழிவறை தொட்டி நிரம்பியது. அதனால் அவற்றை அகற்ற ேநற்று முடிவு செய்திருந்தார். அதன்படி நேற்று மதியம் ஒரு லாரியில் கழிவுநீர் எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து மேலும் தொட்டியில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்று பார்க்க மூடியை திறந்து எட்டி பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி.

அப்போது தொட்டியில் இருந்து வெளியே வந்த விஷவாயு அவரை தாக்கியது. இதனால் கிருஷ்ணமூர்த்தி எதிர்பாராதவிதமாக தொட்டிக்குள் மயங்கி விழுந்தார்.  அங்கு வந்த  மகன் கார்த்திக், தந்தையை காணவில்லையே என்று ெதாட்டியினுள் எட்டி பார்த்தார். அவரையும், விஷ வாயு தாக்கியது. இதில் மயங்கி கார்த்திக்கும் தொட்டிக்குள் விழுந்தார். மேலும் கணவன் மற்றும் மகன் தொட்டிக்குள் மயங்கி விழுந்ததை பார்த்து லதா கூச்சலிட்டு தனது மற்றொரு மகன் கண்ணனிடம் கூறினார். இரண்டு பேரை காவு வாங்கிய அந்த விஷவாயு கழிவுநீர் தொட்டி கண்ணனையும் விட்டு வைக்கவில்லை. தொட்டியில் இருந்து வெளியே வந்த விஷ வாயு தாக்கியதில் அவரும் மயங்கி அதனுள் விழுந்தார். ஒரே குடும்பத்தின் கணவர், 2 மகன்கள் தொட்டிக்குள் விழுந்து எந்த அசைவும் இல்லாததை பார்த்து அதிர்ந்த லதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். மேலும் அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் திருநெல்வேலியை சேர்ந்த ரமேஷ் என்கிற பரமசிவம் (31), ஓடி வந்து தொட்டிக்குள் பார்த்தார்.

அவரையும் விஷ வாயு தாக்கியது. இதை பார்த்து அவர் வீட்டில் குடியிருக்கும் இன்னொரு நபர் வடமாநிலத்தை சேர்ந்த சுரதா பாய் (28), பார்த்துள்ளார். இவரையும் விஷவாயு தாக்கியது. மேலும் லதா இவற்றை பார்த்து கதறி அழுதபடி சத்தம் போட்டுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஆரணியை சேர்ந்த லட்சுமி காந்தன் (22), தொட்டியை எட்டி பார்த்தார். அவர் மீதும் விஷ வாயு பாய்ந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து 6 பேர் விஷவாயு தாக்கி தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லதா அங்கு வருபவர்களிடம் யாரும் தொட்டிக்கு செல்ல வேண்டாம் என தடுத்து நிறுத்தி கதறி அழுதார். மேலும் அந்த இடத்தில் அக்கம் பக்கத்தினர் என ஏராளமானோர் குவிந்தனர்.
மேலும் சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் அடுத்தடுத்து விஷவாயு தாக்கி தொட்டிக்குள் விழுந்த உயிரிழந்த 6 பேரின் சடலத்தையும் மீட்டனர். அப்போது, தீயணைப்பு வீரர் ஒருவரையும் விஷவாயு தாக்கியது. அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட 6 பேரின் சடலங்களையும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் ஏஎஸ்பி ராஜேஷ் கண்ணா சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

கணவனை இழந்த கர்ப்பிணி கதறல்
கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் திருநெல்ேவலி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்கிற பரமசிவம் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ேவலைபார்த்து வந்தார். இவருக்கும், பரமேஸ்வரி என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் வாடகைக்கு தங்கினர். தற்போது பரமேஸ்வரி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். விஷ வாயு தாக்கி கணவன் இறந்ததை கண்டு பரமேஸ்வரி கதறி அழுத சம்பவம் கல் மனதையும் கரைக்கும் வகையில் இருந்தது.

குடும்பத்தை இழந்ததால் தற்கொலைக்கு முயற்சி
கணவன் மற்றும் மகன்களை பறிகொடுத்த லதா, சடலங்களை தொட்டியிலிருந்து மீட்டதை பார்த்ததும் மனம் உடைந்து தனது தலையில் அடித்து கொண்டு கதறி அழுதார். மேலும் திடீரென அந்த வழியாக வந்த ஒரு லாரி மீது பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றார். இதைக்கண்ட ஏஎஸ்பி ராஜேஷ் கண்ணா அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினார். இருப்பினும் லதா மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தனக்கு தானே புலம்பி சொன்னதைேய திருப்பி, திருப்பி சொல்லி கதறி அழுதார். இதனை கண்டு அருகில் இருந்தவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

சப்-கலெக்டர், எம்எல்ஏ ஆறுதல்
ஸ்ரீபெரும்புதூரில் அடுத்தடுத்து விஷவாயு தாக்கி 6 பேர் இறந்த சம்பவத்தை கேள்விப்பட்டு காஞ்சிபுரம் சப்-கலெக்டர் சரவணன் மருத்துவமனைக்கு வந்து லதாவிற்கு ஆறுதல் கூறினார். மேலும் அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி மருத்துவமனைக்கு வந்து ஆறுதல் கூறினார்.

ஆண் வாரிசுகளே இல்ைல
லதா வீட்டில் அவரது கணவர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் 2 மகன்கள் என்று சந்ேதாஷமாகவே இருந்தனர். குறிப்பாக அவரது மகன்கள் இருவரும் அம்மா மீது ரொம்பவும் பாசம் வைத்திருந்தனர். இப்போது அந்த குடும்பத்தில் லதா தவிர அனைத்து ஆண்களும் இறந்துவிட்டதால், ஆண் வாரிசுகளே இல்லாத வீடாக மாறிவிட்டதாக லதா கதறி அழுதார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sons , Disaster, sewage tank, killed,
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்...