×

பருவமழை பொய்த்து போனதால் சேந்தமங்கலத்தில் வறண்ட ஏரிகள் : குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை பொய்த்து போனதால், சேந்தமங்கலத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், பருவமழையின் அளவு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. நடப்பாண்டில் பருவமழை, சராசரியை விட மிக குறைவாக பெய்ததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக சேந்தமங்கலம் பொம்மசமுத்திரம், சின்னகுளம்,  துத்திக்குளம், பொன்னர்குளம், பழையபாளையம் ஆகிய ஏரிகள் வறண்டு கிடப்பதால்  கிணறுகளிலும், நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக குறைந்துள்ளது.

இதனால் கொல்லிமலை அடிவார பகுதியான வெண்டாங்கி,  புளியங்காடு, நடுக்கோம்பை, காரவள்ளி உள்ளிட்ட  பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்தும், கருகியும் வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் பிரச்னை ஏற்படாமல் தடுக்க, மாவட்ட நிர்வாகம்  உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lakes ,Senthamangalam , Monsoon, centamankalam, lakes, drinking water
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை