×

1.80 கோடி நிலத்தை அபகரித்த பைனான்சியர் உட்பட 4 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னை: போலி ஆவணம் மூலம் ₹1.80 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்து விற்பனை செய்த பெண் பைனான்சியர் உட்பட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது ெசய்தனர்.சென்னை சிட்லபாக்கம் தாங்கல் கரையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (36). இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், பல்லாவரம் பகுதியில் உள்ள பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் சுகன்யா  மற்றும் டில்லிபாபு ஆகியோரிடம் 4,164 சதுர அடியுள்ள எனது வீட்டு ஆவணங்களை அடமானம் வைத்து ₹6 லட்சம் பணத்தை கடந்த 2018ம் ஆண்டு வாங்கினேன். கடன் தொகைக்காக மாதம் மாதம் முறையாக வட்டி செலுத்தி வந்தேன். இந்நிலையில் கடனுக்காக கொடுத்த வீட்டு பத்திரத்தை வைத்து போலியாக ஆவணம் உருவாக்கி சுகன்யா மற்றும் டில்லிபாபு உட்பட 3 பேர் சேர்ந்து அந்த  இடத்தை வெறு ஒரு நபருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் சுகன்யா, டில்லிபாபு ஆகியோர் அடமானம் வைத்த வீட்டு பத்திரத்தை தனது நண்பர்  விநாயகா உடன் சேர்ந்து உரிமையாளர் போல் போலி ஆவணம் தயாரித்து வியாசர்பாடியை சேர்ந்த ஜாஹூபர் அலி என்பவருக்கு ₹1.80 கோடிக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. நிலத்தை வாங்கிய ஜாஹூபர் அலி எல்ஐசி ஹவிசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் பத்திரத்தை அடமானம் வைத்து ₹1.31 கோடி வாங்கி மோசடி செய்து உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து மோசடி செய்த பல்லாவரத்தை சேர்ந்த தனியார் பைனான்ஸ் நிறுவன உரிமையானர் சுகன்யா (41), துரைப்பாக்க்தை  சேர்ந்த விநாயகா ஆச்சாரி(43), ஆலாப்பாக்கத்தை சேர்ந்த டில்லிபாபு (40), வியாசர்பாடியை சேர்ந்த  ஜாஹூபர் அலி (34) அகிய 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : landmines ,Central Crime Branch , 1.80 crore land , arrested,Central Criminal ,Police
× RELATED மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது..!!