×

சீமான் மைத்துனர்கள் இரு கட்சிகளில் போட்டி: ஒருவர் அமமுக, ஒருவர் நாம் தமிழர்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மைத்துனர்கள் 2 கட்சிகளின் சார்பில் போட்டியிடுகின்றனர். ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அண்ணன் தம்பிகளான மகாராஜன் திமுக வேட்பாளராகவும், லோகிராஜன் அதிமுக வேட்பாளராகவும்  போட்டியிடுகின்றனர். அதேபோல மற்றொரு அண்ணன், தம்பி மதுரையிலும், விருதுநகரிலும் இருவேறு கட்சிகளில் போட்டியிடுகின்றனர். முன்னாள் சபாநாயகர்  காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை மதுரை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடுகிறார். அவரது தம்பி அருண்மொழித்தேவன்,  விருதுநகர் தொகுதியில் நாம்தமிழர் கட்சியின் சார்பிலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதில், டேவிட் அண்ணாத்துரை, அருண்மொழித் தேவன் இருவரும் சீமானின் மைத்துனர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : brother-in-law ,Seeman ,parties ,Ammukku , Seeman, nephews, Ammukha, we are Tamil
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...