×

வாழும் போதும் வாழ்க்கைக்குப் பிறகும்: இந்திய ஆயுள் காப்பீடுக் கழகம்

சென்னை: ஆயுள் காப்பீடு என்றாலே நமக்கு எல்ஐசி-தான் முதலில் நினைவுக்கு வரும். ஆயுள் காப்பீடு துறையில் 62 வருடங்களைக் கடந்து  கோலோச்சி வரும் இந்திய ஆயுள் காப்பீடுக் கழகத்தின் தென் மண்டல மேலாளர் திரு.ஆர்.தாமோதரன் நமது தினகரன் நாளிதழுக்கு பிரத்யேக மாக அளித்த பேட்டி பின்வருமாறு.கே. ஆயுள் காப்பீடு செய்வதற் கென ஒருவர் வருமானத்தில் எத்தனை சதவீதத்தை ஒதுக்க வேண்டும்?
* ஒருவர் தனது வருமானத்தில் 8% முதல் 10% வரை ஆயுள் காப்பீடுக்காக ஒதுக்கலாம்.கே. 2000 ஆண்டுக்கு பிறகு  தனி யார் காப்பீடு நிறுவனங்கள் நிறைய முளைத்து விட்டன. இதனால் எல்ஐசி நிறுவனத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா?
*  அப்படி எதுவும் இல்லை. தனியார் நிறுவனங்கள் வந்திருந்த போதும் ஒவ்வொரு ஆண்டும் 10% வளர்ச்சியை எட்டுகிறது எல்ஐசி. இது மக்களுக்கு இன்னும் அதிக நம்பிக்கை எல்ஐசி மேல்தான் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.கே. எல்ஐசி-இல் மக்களின் பேராதரவு பெற்ற சமீபத்திய பாலிசிகள் என்னென்ன உள்ளன?
* எண்டோமென்ட், முழுஆயுள், மணிபேக், டெர்ம் அஷ்யூரன்ஸ், பென்ஷன், யூலிப், ைமக்ரோ மற்றும் உடல்நல திட்டங்கள் போன்றவை எல் ஐ சி பாலிசி வகைகள்.
கே. இந்திய மக்களிடம் ஆயுள் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு மற்றும் பங்கேற்பு குறித்த தங்கள் கருத்து என்ன?
* இந்தியாவை பொருத்தவரை 130 கோடி மக்கள் தொகையில் சுமார் 30% நபர்கள் மட்டுமே ஆயுள் காப்பீடு செய்துள்ளனர். கே. சாமான்ய மக்களுக்கென குறைந்த பிரீமியத்தில் பாலிசிகள் உள்ளனவா?
* இருக்கிறது. அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் மைக்ரோ பாலிசித் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. பிரீமியம் வரம்புகள் பல  அடுக்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஏழை மக்களாலும் செலுத்தக் கூடிய வகையில் மிகவும் குறை வானத் தொகையை கொண்டது. கே. ஆயுள் காப்பீடு செய்வோரின் எண்ணிக்கையைப் பெருக்க செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்ன?

* ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்க அனைத்து ஊடகங்கள் வழியே விளம்பரங்கள் செய்யப்படு கின்றன.  அதுமட்டுமின்றி முகவர்கள் மூலமும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல் புதிய புதிய பாலிசிகள் உருவாக்கப்பட்டு மக்கள் பயனடைய  செய்கிறோம். அதில் குறிப்பாக தற்போது பரவலாக பெருகி வரும் புற்றுநோய்க்கு என்றே பிரத்யேக எல்ஐசி பாலிசி அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இது  மக்களிடையே பெருவாரி யான வரவேற்பை பெற்று வருகிறது. கே. புற்றுநோய்க்கு என தனி பாலிசியா? அது என்ன?

* எல்ஐசி கேன்சர் கவர் திட்டத் தில் சேர்ந்த நபர் துவக்கநிலை (Early Stage) புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் காப்பீட்டுத் தொகையில் 25% வழங்கப்படும். அது மட்டுமின்றி  அடுத்த மூன்று பாலிசி பிரீமியங்கள் அல்லது மீதிப் பாலிசி காலம் இதில் குறைந்தளவானது தள்ளுபடி செய்யப்படும். (Major Stage) புற்றுநோய்  முதல் முறையாக கண்டறியப்பட்ட நிலையில் முன்னதாக ஏதேனும் பலன் தொகை அளிக்கப்பட்டிருந்தால் அவற்றைக் கழித்து காப்பீட்டு தொகையின்  100% வழங்கப்படும்.அடுத்த பத்து வருடங்களுக்கு காப்பீட்டு தொகையின் 1% வருமான பயனாக வழங்கப்படும்.

இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்  வருமான உறுதியும் பெறுகிறார் என்பதால் அவருக்கு மனரீதியான ஆறுதலும் கிடைக்கும். இது மருத்துவ காப்பீடு போல் இல்லாமல் தொகை  முற்றிலும் பாலிசிதாரருக்கு வழங்கப்படுவதோடு மருத்துவ அறிக்கைகள், ஆவணங்கள் எதுவும் கோரப்படுவதில்லை. புற்றுநோய் பாதிப்பு  நிரூபிக்கப்பட்டால் மட்டும் போதுமானது. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வயது 20, அதிகபட்ச வயது வரம்பு 65 ஆகும். கேன்சர் கவர் குறைந்த பட்ச  காப்பு தொகை 10 லட்சம் அதிகபட்ச காப்பு தொகை 50 லட்சம். பாலிசி காலத்தை 10 முதல் 30 வருடங்கள் வரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். கே. பென்ஷன் பாலிசிகள் பயன் தருமா?

* இன்று வளர்ந்து வரும் மருத்துவ மற்றும் விஞ்ஞானத் துறையால் மக்களின் ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது. அதனால் வயது முதிர்ந்தோர் எண்ணிக் கையும் பெருகியிருக்கிறது. அவர் களுக்காகவே இந்த பென்ஷன்  பாலிசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. முதியோர் இல்லத்தை நாடாது தங்கள் வாழ்வை சந்தோசமாக கழிப்பதற்கு இந்த பென்ஷன் தொகை முதியோர்களுக்கு உதவும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian Life Insurance Corporation , Life, Indian Life Insurance Corporation
× RELATED மும்பை எல்ஐசி ஆபீசில் தீ விபத்து