×

பாஜவை எதிர்த்து பிரசாரம் செய்வேன்: ‘எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்காதீங்க...’ வைரலாகும் தமாகா மாஜி எம்எல்ஏ பேச்சு

எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என தமாகா மாஜி எம்எல்ஏ ஹசன்அலி வாட்ஸ் அப் பேச்சு வைரலாகி வருகிறது. பாஜ - அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்துள்ளது. இதற்கு அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஹசன்அலி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வாட்ஸ் அப் ஆடியோவில் அவர் பேசியிருப்பதாவது: கூடா நட்பு கேடாய் முடியும். எனவே மதவெறி பிடித்த பாஜவுடன் கூட்டணி வைக்க வேண்டாமென தமாகா தலைவர் வாசனுக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன் அவர் கேட்கவில்லை. வேறு வழியில்லை எனக்கூறி கூட்டணி அமைத்து விட்டார். பாஜவினர் கலவரத்தை தூண்டுபவர்கள். அவர்களுடன் கூட்டணி வைத்ததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. தமாகாவில் தொடர்கிறேன். எந்த கட்சிக்கும் மாற மாட்டேன். ஆனால், மோடிக்கு எதிராக பிரசாரம் செய்வேன்.

 பாஜ ஆட்சியில் நாடு முழுவதும் சிறுபான்மையினர், தலித்துகள் மீது எண்ணற்ற தாக்குதல் நடந்துள்ளது. பாஜவை எதிர்த்து பிரசாரம் செய்ய அழைத்தால், தமாகாவில் இருந்து கொண்டே, எங்கள் கூட்டணி தவறான கூட்டணி. எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரசாரம் செய்ய உள்ளேன். ராமநாதபுரம் தொகுதியில் சாதி, மத, இன வேறுபாடின்றி மக்கள் ஒற்றுமையுடன் உள்ளனர். இந்த ஒற்றுமை நிலைக்க மதவெறி பிடித்த பாஜவை, குறிப்பாக ராமநாதபுரம் தொகுதியில் அனைத்து மக்களும் இணைந்து தோற்கடிக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : coalition ,Bhajan , bjp,tcp
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்