×

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

பெரம்பூர்: பேசின் பிரிட்ஜ் ரயில்வே யார்டு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு கருப்பு நிற பையுடன் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் தஞ்சை மாவட்டம் அண்ணா நகர் 4வது தெருவை சேர்ந்த மதன கோபால கிருஷ்ணன் (32) என்பதும், அவர் வைத்திருந்த பையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ கஞ்சா இருந்ததும் தெரிந்தது.  அதை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர், தேசிய போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து, நள்ளிரவில் ரயிலில் இருந்து எடுத்து கொண்டு பேருந்தில் பயணம் செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். செம்மரக்கட்டை பறிமுதல்: ஆலந்தூர் எம்.கே.சாலை காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு கிடங்கில் குப்பைகளுக்கு நடுவே மறைத்து வைத்திருந்த 812 கிலோ செம்மரக்கட்டைகளை போலீசார்  பறிமுதல் செய்தனர். கிடங்கை நடத்தி வந்த அசாருதீன் தலைமறைவாகி உள்ளார். அவரை தேடி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hijackers , The train, the canja confiscated, the arrest of one
× RELATED அண்ணாசாலையில் மீன் வியாபாரியை தாக்கி...