×

பாஜவுக்கு பிரசாரம் செய்வதா? வாசனுக்கு வந்த தலைவலி

அதிமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பின்பு ஒரு சீட்டுக்காக தமாகா இணைந்தது அந்த கட்சியினருக்கு கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்காம். முக்கிய நிர்வாகிகளை எல்லாம் கட்சி தலைவர் கூப்பிட்டு சமாதானப்படுத்தினாராம். இதற்கிடையே சைக்கிள் சின்னம் கிடைச்சது கட்சியினருக்கு ஆறுதலை தந்திருக்காம். அதிமுக கூட்டணியில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியிருக்கிற நிலையில், அந்தந்த தொகுதியில் உள்ள வேட்பாளர்கள் கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு விடுத்து வருகிறார்கள்.  தமாகா நிர்வாகிகளை அழைத்து பேசியிருக்கிறாங்களாம். தமாகாவுக்கு இருக்கிற முக்கிய நிர்வாகிகள் எல்லாம் காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டவர்கள். அவர்கள் எல்லாம் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு உழைக்க தயாரா இருக்காங்களாம்.

ஆனால் பாஜ கட்சிக்கு ஆதரவா... எங்களால பிரச்சாரத்துக்கு செல்ல முடியாது என்று ஓப்பன் டாக் விட்டு வருகிறார்களாம். இதனால் பாஜ கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் உள்ள பாஜ நிர்வாகிகள் தமாகா நிர்வாகிகளை எப்படி பிரச்சாரத்துக்கு அழைப்பது என்று அதிமுக கூட்டணி கட்சிக்காரங்களோட ஆலோசனை செய்தார்களாம். இதனால் அதிமுக தலைமை இந்த பிரச்னையை ஜி.கே.வாசன் காதுக்கு கொண்டு சென்றிருக்கிறார்களாம்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhajah Vasan , AIADMK, BJP
× RELATED காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை;...