×

மபி.யில் தலைவலி தைலத்தை தேடும் பா.ஜ.

மபி.யில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜ.வுக்குள் கடும் கோஷ்டி மோதல் நிலவுகிறது. மக்களவை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து மத்தியப் பிரதேச தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அம்மாநிலத்தில் ஆளும் அரசான காங்கிரசில் வேட்பாளர்கள் அறிவிப்பதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. மேலும், முதலமைச்சர் கமல்நாத் மற்றும் முன்னாள் முதலமைச்சர் திக்விஜய்சிங் ஆகியோரிடையேயும் கருத்து வேறுபாடுகள் எழுந்து மோதல் போக்கு வெடித்தது. இந்த நிலையில், பாஜ வட்டாரத்தில்  சீட் கேட்டும், குறிப்பிட்ட நபர்களுக்கு சீட் வழங்கக்கூடாது என்று கூறியும் உட்கட்சி பூசல் வெடித்தது. தற்போது உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டி வருகிறது. அம்மாநிலத்தின் தலைநகரான போபால் தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் இரண்டு கட்சிகளும் பணியாற்றி வருகின்றன. இந்த சூழலில், போபால் தொகுதியில் உள்ளூரை சேர்ந்த ஒருவரை தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அந்த தொகுதியை சேர்ந்த பாஜ.வினர் பிரச்னைகிளப்பி வருகின்றனர்.

போபால் மேயர் அலோக் சர்மா, போபால் தொகுதியின் தற்போதைய எம்.பி அலோக் சஞ்ஜார் மற்றும் பா.ஜ. முக்கிய நிர்வாகிகள் நேற்று முன்தினம் முன்னாள் முதலமைச்சர் பாபுபால் கவுரை சந்தித்தனர். இந்த சந்திப்பை தொடர்ந்து, அலோக் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘போபால் தொகுதியில் உள்ளூரை சேர்ந்த வேட்பாளரை தான் நிறுத்த வேண்டும் என்று இந்த தொகுதி பா.ஜ. நிர்வாகிகள் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த தொகுதியில் பா.ஜ. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.’’ என்றார். இதைத் தவிர மேலும் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் மபி பா.ஜ. கடும் குழப்பத்தில் உள்ளது. தொடர்ந்து பல்வேறு குழப்பங்களை அக்கட்சியினர் ஏற்படுத்தி வருகின்ற காரணத்தால் பா.ஜ. மேலிடத்திற்கு தலைவலி உண்டாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,MB , BJP, headache, oil
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...