×

பங்குனி உத்திர திருவிழா

திருவொற்றியூர்:  திருவொற்றியூர் சரஸ்வதி நகரில் உள்ள  திருமுருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்  விரதம் இருந்து காவடி ஏந்தினர்.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இருந்து காவடியுடன் அலகு குத்திய பக்தர்கள் மற்றும்  பால்குடம் ஏந்திய பெண்கள் ஊர்வலமாக வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திமுக பகுதி செயலாளர் தி.மு.தனியரசு, கோயில் அறங்காவலர்கள் மணிக்குமார், தினேஷ்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Marai Uthiram Festival , Uthiram Festival
× RELATED பங்குனி உத்திர திருவிழா : காவடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்