×

மக்களவை தேர்தல்: பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு...வாரணாசியில் மோடி, தூத்துக்குடியில் தமிழிசை போட்டி

டெல்லி: மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் முதல் பட்டியலை மத்திய அமைச்சர் ஜெ.பி நட்டா வெளியிட்டார். பாராளுமன்றத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது, மார்ச் மாதம் 5-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. எனவே இந்த ஆண்டும் மார்ச் 5-ம் தேதி தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி செய்தியாளர்களிடம் பேட்டிளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, 17-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தார்.

மார்ச் 19-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் மார்ச் 26-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 27-ம் தேதி வேட்புமனு பரிசலீனை செய்யப்படும் என்றும் வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 29ம் தேதி கடைசி நாள், தமிழகத்தில் மே-23 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் முதல் 182 வேட்பாளர்கள் பட்டியலை மத்திய அமைச்சர் ஜெ.பி நட்டா வெளியிட்டார்.

வேட்பாளர்கள் பெயர் மற்றும் தொகுதி:
1. வாரணாசி -பிரதமர் மோடி
2.காந்தி நகர்- அமித் ஷா
3.லக்னோ- ராஜ்நாத் சிங்
4. நாக்பூர்- நிதின் கட்கரி

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்:

1. கன்னியாகுமரி : பொன் ராதாகிருஷ்ணன்
2. தூத்துக்குடி : தமிழிசை சௌந்தராஜன்
3. கோவை : சி.பி ராதாகிருஷ்ணன்
4. சிவகங்கை : எச்.ராஜா
5. ராமநாதபுரம் : நயினார் நாகேந்திரன்



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lok Sabha ,BJP , Lok Sabha election, BJP, candidates list, release ... Varanasi, Modi, Thoothukudi, Tamilnadu, Competition
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...