ஒடிசாவில் வேதாந்தா ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 2 பேர் பலி: போலீஸ் தடியடியில் 30 பேர் காயம்

காளாஹந்தி:  ஒடிசாவில் உள்ள வேதாந்தா அலுமினிய தொழிற்சாலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.  
ஒடிசாவில் உள்ள காளஹந்தியில் வேதாந்தா அலுமினிய சுத்திகரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகின்றது. இந்த தொழிற்சாலையின் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்காக மக்கள் ஆலை முன் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். ஆலை நிர்வாகம் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர்.

ஆலையில் பிரதான நுழைவு வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்த பாதுகாவலர்கள் கலைந்து ெசல்லும்படி அறிவுறுத்தினார்கள். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாததோடு, ஆலைக்குள் வலுக்கட்டாயமாக செல்ல முயன்றனர். மேலும் பாதுகாவலர்கள் குடிசைக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சம்பவ இடத்திற்கு ஒடிசா தொழிற்சாலை பாதுகாப்பு படையினர் விரைந்தனர். அவர்களும் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஆலைக்குள் செல்வதற்கு முன்னேறியதால் தொழிற்சாலை படையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினார்கள்.

இதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி இரண்டு பேர் உயிரிழந்தனர். இதில் ஒருவர் ஒப்பந்த தொழிலாளியான  தினா பத்ரா. மற்றொருவர் ஒடிசா தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த அவில்தார் சுஜித் என அடையாளம் காணப்பட்டுள்ளது. வேதாந்தா நிறுவன வளாகத்தில் போராட்டம், தடியடியால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED குடியிருப்பு பகுதியில் மருத்துவமனை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு