×

வடசென்னை தொகுதியில் மோதல்களை தடுக்க பறக்கும் படையினரை அதிகரிக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

பெரம்பூர்:  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, வடசென்னை நாடாளுமன்ற  தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகளில் மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, ராயபுரம், கொடுங்கையூர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு  வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் 100 மீட்டர் தூரத்துக்கு ஒரு கோடும், 200 மீட்டர் தூரத்துக்கு ஒரு கோடு போடும் பணி நடந்து வருகிறது.
கடந்த காலங்களில் தேர்தல் பிரசாரம், வாக்கு சேகரிப்பின் போது அரசியல் கட்சியினர் இடையே மோதல்கள் ஏற்பட்டது. குறிப்பாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பல இடங்களில் இந்த மோதல் சம்பவங்கள் நடைபெற்றது. தற்போது, மேற்கண்ட இரு தொகுதிகளிலும் பறக்கும் படையினர் குறைந்தளவே உள்ளதால், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருள், பணம் ஆகியவற்றை மறைமுகமாக வழங்கி வருகின்றனர். மேலும், பரிசு  பொருட்களை பதுக்கியும் வைக்கின்றனர்.

இதுபற்றி பொதுமக்கள் புகார் அளித்தால், பறக்கும் படை அதிகாரிகளால் விரைந்து சென்று அவற்றை தடுக்க முடியாமல் திண்டாடுகின்றனர். எனவே, பறக்கும் படையினரை அதிகப்படுத்தினால், கட்சியினரிடையே ஏற்படும்  மேதல்கள், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.மேலும், இரவு நேர பணியில் பறக்கும் படையினர் ஈடுபடுவதில்லை. இதை பயன்படுத்தி ஆளும்கட்சியினர் வாக்காளர்களுக்கு பண விநியோகத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. எனவே, கூடுதல் பறக்கும் படையினைரை  நியமித்து, பாகாப்பு பணியில் ஈடுபட வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. இதனால், நாடாளுமன்ற வேட்பு மனு தாக்கல் செய்யும் இடமான பேசின்பிரிட்ஜ் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திலும், வியாசர்பாடி சர்மாநகரில் உள்ள  மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் தயார்நிலையில் இருந்தனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : North District , North District, constituency, public emphasis
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...