×

ஒடிசா பத்மராஜன்’

‘தேர்தல் மன்னன்’ பத்மராஜனை அறியாதவர்கள் தமிழகத்தில் இருக்க  முடியாது. 1988ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும்  சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். குறிப்பாக, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். கடைசியாக 199வது முறையாக திருவாரூர் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டார். அத்தனை தொகுதியிலும் தோல்வி தான். இவரைப் போலவே ஒடிசாவிலும் ஒரு ஹோமியோபதி டாக்டர் தேர்தல் மன்னனாக உள்ளார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?  84 வயதாகும் ஷியாம்பாபு என்ற அந்த மருத்துவர், கடந்த  1957  முதல் இன்றுவரை தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். 28 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். ஒடிசா முதல்வர்  நவீன் பட்நாயக், முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ், முன்னாள் முதல்வர்கள் பிஜு பட்நாயக், ஜே.பி.பட்நாயக், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ராம் சந்திரநாத், சந்திரசேகர் சாகு ஆகியோரை எதிர்த்து ஷியாம்பாபு போட்டியிட்டுள்ளார்.

இந்த மக்களவை தேர்தலிலும், ஒடிசா  அஸ்கா மற்றும் பெர்காம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த இரு தொகுதிகளிலும் 9 முறை போட்டியிட்டு மண்ணைக்கவ்விய அனுபவம்  ஷியாம்பாபுவுக்கு உண்டு. ஒன்மேன் ஆர்மி போல, இவர் தான் வேட்பாளர், இவர் தான் பிரச்சாரகர். தோல்வியைக் கண்டு கலங்காமல் மீண்டும் மீண்டும் கஜினி முகமது போல தேர்தல் படையெடுப்பு நடத்தி வரும் ஷியாம்பாபுவை உலகின் மிகப் பெரிய தேர்தல் தோல்வியாளர் என்று பிபிசியே வர்ணித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Orissa Padmarajan , Orissa Padmarajan
× RELATED சிவசேனா, தேசியவாத காங்கிரசை போல்...