×

நாடாளுமன்ற தேர்தல் செலவுக்காக கான்ட்ராக்டர்களிடம் கட்டாய வசூல்: பொறியாளர்களுக்கு மேலிடம் உத்தரவு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் உள்ள கட்டுமானம் மற்றும் நீர்வளம் ஆகிய பிரிவுகள் மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுதல், அணைகள், ஏரிகள் புனரமைத்தல், புதிதாக அணைக்கட்டு  கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.இந்த நிதியை கொண்டு பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு, தொடர்ந்து, ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படுகிறது. அதன்பிறகே திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். சில நேரங்களில் நிதி ஒதுக்கீடு,  டெண்டர் விடுவதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திட்ட பணிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியாகும் என்ற நிலையில்,  கடந்த டிசம்பர், ஜனவரி மாதத்தில் ரூ.2.800 கோடியில் பல்வேறு திட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. குறிப்பாக,  ரூ.1532 கோடியில் அத்திக்கடவு, அவினாசி திட்டம், ரூ.400 கோடியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை, முக்கொம்பு கதவணை கட்ட ரூ.330 கோடி, ரூ.83 கோடி செலவில் அடையாறு தூர்வாரும் பணி, ரூ.150 கோடி  செலவில் பாலாறு, நம்பியாறு உள்ளிட்ட பல்ேவறு ஆற்றுப்படுகைகளில் தடுப்பணை, ரூ.3.72 கோடி செலவில் மணிமுத்தாறு அணை புனரமைப்பு, ரூ.1.82 கோடி செலவில் செங்குன்றம் ஏரி, ரூ.1.91 கோடியில் செம்பரம்பாக்கம் ஏரி  புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கு ரூ.2.800 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு, உடனடியாக ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்த நிறுவனம் சார்பில் உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டது.

பொதுவாக ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து கட்டுமான பிரிவு திட்ட பணிகள் என்றால் 11 சதவீதம், நீர்வளப்பிரிவு திட்ட பணிகள் என்றால் 21 சதவீதம் தான் கமிஷனாக பெறப்படும். ஆனால், தற்ேபாது நாடாளுமன்ற தேர்தல்  செலவுக்காக கூடுதலாக கான்ட்ராக்டர்களிடம் கமிஷன் வசூலிக்க மேலிடம் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கட்டுமான பிரிவு திட்ட பணிக்கு 15 சதவீதம், நீர்வளப்பிரிவுக்கு 25 சதவீதம் கூடுதலாக கமிஷன் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தற்போது முதற்கட்டமாக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து டெண்டர் எடுத்த  கான்ட்ராக்டர்களிடம் நாடாளுமன்ற தேர்தல் செலவுக்கு என்று சேர்த்து அதிகாரிகள் பணம் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் பணம் கண்காணிப்பு பொறியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து முதன்மை தலைமை பொறியாளர் முதல் இளநிலை பொறியாளர் வரை 25 சதவீதம் கான்ட்ராக்டர்களிடம் கமிஷனாக  பெறுகின்றனர். இதன் மூலம் 50 சதவீதம் வரை கமிஷனாக கான்ட்ராக்டர்களிடம் இருந்து தற்போது வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது நடைபெறும் திட்ட பணிகள் தரமாக நடைபெறுமா என்ற சந்தேகம் சமூக ஆர்வலர்கள்  மத்தியில் எழுந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : parliamentary, election, Compulsory, contracts:
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...