×

கடும் வறட்சியால் காடையாம்பட்டி ஏரியில் 500 மரங்கள் காய்ந்தன

இளம்பிள்ளை: இளம்பிள்ளை அடுத்த காடையாம்பட்டி ஏரியில் தண்ணீர் இல்லாததால் வேம்பு மற்றும் கருவேல மரங்கள் காய்ந்து வருகிறது. இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை பேரூராட்சிக்குட்பட்ட காடையாம்பட்டியில், 45 ஏக்கர் பரப்பரளவில் ஏரி அமைந்துள்ளது.  இந்த ஏரியின் மூலம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதியையும், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகள், வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் நிலத்தடி நீரையும் பெற்றுவந்தது.

இந்த ஏரியில் வேம்பு, கருவேலம் என 500க்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தன. போதிய மழைய இல்லாததால், ஏரி தண்ணீரின்றி வறண்டு போனது. தவிர ஏரியில் உள்ள வேம்பு மற்றும் கருவேல மரங்கள் காய்ந்து வருகிறது. எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பருவமழைக்கு முன்பாக ஏரியை தூர்வாரி, ஆழப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : drought ,Kadiyampatti Lake , Drought, Cadizambadi Lake, Trees
× RELATED புதுகை மாவட்டத்தில் கடும் வறட்சியால்...