×

ஆதம்பாக்கத்தில் திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்: டி.ஆர்.பாலு பங்கேற்பு

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் டி.ஆர்.பாலு பங்கேற்று உரையாற்றினார். சென்னை ஆலந்தூர் பகுதி திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் மற்றும் வாக்குச்சாவடி பாக முகவர்கள்  கலந்துரையாடல் கூட்டம் நேற்று காலை ஆதம்பாக்கத்தில் நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்ட செயலாளர்  மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் என்.சந்திரன், பி.குணாளன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் வரவேற்றார்.திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை  வழங்கினர்.

இந்த கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பொறுப்பாளர்கள் காசிமுத்துமாணிக்கம், அசன் முகமது ஜின்னா, எம்எஸ்கே.இப்ராஹிம், குணசேகர், கீதா ஆனந்த், கிரிஜா பெருமாள், பூபாலன், ஜெயராம் மார்த்தாண்டன்,  ஏஎம்வி.பிரபாகர்ராஜா, ப.முத்து, உலகநாதன், எஸ்.ரத்தினம், இரா.பாஸ்கர், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், ஜெ.நடராஜ், வாணுவம் பாபு, முரளிகிருஷ்ணன், வேலவன், ஏசுதாஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.சிக்கந்தர், என்.சீதாபதி,  நாஞ்சில் பிரசாத், நேருரோஜா, பாக்யராஜ், கனிபாண்டியன், மதிமுக பா.சுப்ரமணியன், சின்னவன், விடுதலை சிறுத்தைகள் பெ.ரவிசங்கர், சீராளன், மா.கம்யூனிஸ்ட் பீமாராவ், இந்திய கம்யூனிஸ்ட் ஏழுமலை, இந்திய யூனியன்  முஸ்லீம் லீக் கட்சி அப்துல் வகாப், மனிதநேய மக்கள் கட்சி சலீம்கான், தமுமுக பிர்தோஸ், யாசீர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK Coalition Demonstration Meeting ,DR , atampakkat, DMK ,Coalition ,Meeting, DR Balu ,
× RELATED தொப்பையால் உருவாகும் நோய்கள்!