×

தஞ்சாவூர் தமாகா வேட்பாளர் இன்று அறிவிப்பு

ஈரோடு:  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஈரோட்டில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமாகா.,விற்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை இன்று அறிவிப்பேன்.

தமாகா.,விற்கு சைக்கிள் சின்னம் பெறுவதற்காக உயர்நீமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் வெற்றி கிடைத்துள்ளது. இனி சைக்கிள் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவது குறித்து தேர்தல் ஆணையம்தான் இறுதி முடிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சுயேச்சை சின்னம் பெற்று போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thanjavur Thamaga ,candidate , Thanjavur Tmk candidate Today is the announcement
× RELATED செலவு செய்ய பணமில்ல… பூரி காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்