×

சட்டீஸ்கர் அவரு பிரதமராகணும்... இவரு முதல்வராகணும்... மாத்தி, மாத்தி பாராட்டிய பவன் கல்யாண், மாயாவதி

ஆந்திர அரசியலில் புதிய திருப்பமாக, சட்டப்பேரவை, மக்களவை தேர்தலில் நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இதை டெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார். மாயாவதியும் பவன் கல்யாணும் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது மாயாவதி கூறியதாவது: ஆந்திர சட்டப்பேரவை மக்களவை தேர்தலில் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். புதியவர்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக உள்ளது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி, பவன் கல்யாணின் ஜன சேனா மற்றும் சில கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆந்திரா, தெலங்கானாவில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீடு கிட்டதட்ட முடிந்துவிட்டது. இதில் பிரச்னை ஏதும் இல்லை. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். ஆந்திராவில் அடுத்த முதல்வராக பவன் கல்யாண் பதவியேற்க வேண்டும். அதுவே எனது விருப்பம். ஏப்ரல் 3, 4 ஆகிய தேதிகளில் ஆந்திரா, தெலங்கானாவில் நான் தேர்தல் பிரசாரம் செய்ய  உள்ளேன் என்று மாயாவதி கூறினார். பவன் கல்யாண் கூறுகையில், “மாறிவரும் அரசியல் சூழ்நிலையில், மாயாவதி நாட்டின் பிரதமராக பதவியேற்க வேண்டும். இதுவே எங்களது விருப்பம், அதற்காக பாடுபடுவோம்” என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chattisgarh ,Pawan Kalyan ,Maithi ,Mayawati , Pawan Kalyan, Mayawati
× RELATED நடிகர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு...