×

மக்களவை தேர்தலில் சென்னையில் 3 தொகுதிகளிலும் திமுக போட்டி: தொண்டர்கள் குஷி

சென்னை: மக்களவை தேர்தலில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதனால் தொண்டர்கள் குஷியாகியுள்ளனர். இப்போதே உற்சாகமாக வேலையை தொடங்கியுள்ளனர். மக்களவை தேர்தலில் திமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-2, விடுதலை சிறுத்தைகள் கட்சி-2, மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 1, கொமக 1, ஐஜேகே 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு போக 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகின்றது. இதில் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் சென்னையில் உள்ள மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை ஆகிய 3 மக்களவை தொகுதிகளும் திமுகவுக்கு கிடைத்துள்ளது.

மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம், எழும்பூர்(தனி), துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் திமுக வசம் தான் உள்ளது. அதே போல, தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் சைதாப்பேட்ைட, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 தொகுதிகள் திமுக வசம் உள்ளது. வடசென்னைக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் திருவொற்றியூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் ஆகிய 3 தொகுதிகள் திமுக வசம் தான் உள்ளது. தற்போது சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளும் திமுகவுக்கு கிடைத்துள்ளது. இது திமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் வெற்றி நமது பக்கம் தான் என்ற சந்தோஷத்தில் இப்போதே பணியை தொடங்கியுள்ளனர். வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்ட உடன் இன்னும் பணியை தூரிதப்படுத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rival ,DMK ,constituencies ,Volunteers Kushi ,Chennai ,election ,Lok Sabha , Lok Sabha election, Chennai, DMK
× RELATED அதிமுகவில் சென்னை மண்டலத்தை சேர்ந்த 15...