×

தமிழகத்தில் கெடுபிடி கேரளாவில் ப்ரீ

மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் போன்றவற்றை விநியோகம் செய்வதை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிக்கு நோயாளிக்காக கொண்டு செல்கின்ற பணம், விவசாயிகள் வியாபாரிகள் விற்பனைசெய்து கொண்டுவருகின்ற பணம் என்று ₹50 ஆயிரத்திற்கு மேல் பணம் இருந்தால் அதற்கு உரிய ஆவணம் இல்லை எனில் அந்த தொகையை அலுவலர்கள் பறிமுதல் செய்கின்றனர். ஆனால் இந்த நடவடிக்கைகள் தமிழகத்தில்தான் அதிக அளவில் உள்ளது. ஆனால் கேரளா போன்ற மாநிலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் இல்லை.

இதனால் தமிழகத்திற்கு பயணம் செய்கின்றீர்களா? ₹50 ஆயிரத்திற்கு மேல் வைத்திருந்தால் உரிய ஆவணத்துடன் செல்லுங்கள் என்று மலையாளிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரங்கள் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளன. இதற்கு காரணம் கேரளாவில் இதுபோன்று பறக்கும்படைகளும் அமைக்கப்படவில்லை, பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறார்களா என்று அதிரடி சோதனையும் நடத்தப்படுவது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். தமிழகத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்கின்ற வாகனங்களும் பறக்கும்படையினரின் சோதனையில் இருந்து தப்புவது இல்லை. ரிசர்வ் வங்கி ₹2 லட்சத்திற்கு கீழ் வரை கையில் வைத்திருக்கலாம் என்று அறிவித்துள்ளபோதிலும் தேர்தல் ஆணையம் அதனை ₹50 ஆயிரத்திற்கு கீழ் என்று வரையறை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu , Kudupadi , Tamil Nadu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...