×

பாஜவுக்கு 5 தொகுதி ரொம்ப ஓவர்.. பணம் வாங்கத்தான் பாமக சேர்ந்திருக்கு..: இளங்கோவன் தடாலடி

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:தமிழ்நாட்டில் பாஜவுக்கு 5 தொகுதிகள் என்பது ரொம்ப அதிகம். மோடி இதுவரை தமிழ்நாட்டுக்கு பல முறை வந்து விட்டார். அவருக்கு கூட்டம் கூடுவதே கிடையாது. பாஜகவை பொறுத்தவரை எவ்வளவு குட்டிக்கரணம்  அடித்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது. 5 தொகுதிகளில் ஒரு வேளை கன்னியாகுமரியில் டெபாசிட் வாங்கலாம். மற்ற நான்கு தொகுதிகளில் அவர்களால் டெபாசிட் வாங்க முடியாது. தமிழிசை இசை பாட போக  வேண்டியது தான்... தமிழிசையை பொறுத்த வரையில் அவர் எல்லாம் டெபாசிட் வாங்குவதே ரொம்ப கஷ்டம்.தமிழகத்தில் பாஜக காலூன்றியே தீருவோம் என்று திருப்பூர் கூட்டத்தில் குதித்து குதித்து பேசினார்கள் அந்த அம்மா. ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை என்பது அவருக்கே தெரியும். இருந்தாலும் ேவஷம்  போட்டாச்சே என்பதால் நடித்து கொண்டிருக்கிறார்.பாமகவும், பாஜகவும் இல்லாமல் அதிமுக போட்டியிட்டால் டெபாசிட் கிடைப்பதற்கு வழி உண்டு.

ஆனால் பாமகவோடும், பாஜகவோடும் சேர்ந்து விட்ட இந்த சூழ்நிலையில் அதிமுக பல தொகுதிகளில் டெபாசிட் கூட இழக்கும். பாமகவும், பாஜகவும் இணைந்தது அதிமுகவுக்கு பிளஸ் கிடையாது. இது கொள்கை கூட்டணி  கிடையாது. ஏதோ பாமகவை பொறுத்தவரை எலெக்சன் நேரத்தில் வியாபாரம் பேசுவதும், பணம் கொள்வது என்ற சூழ்நிலையில் தான் இருக்கிறார்களே ஒழிய வேறொன்றும் இல்லை. பாமகவை பொறுத்தவரை அதிமுகவை அவ்வளவு கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். ஆகவே இவர்களை பொறுத்தவரை சுயநல கூட்டணி. பேரம் செய்து எவ்வளவு அதிகமாக மற்றவர்களிடம் பணம் வாங்கலாம் என்பதை  கருத்தில் வைத்து கொண்டு தான் கூட்டணியில் சேருகிறார்கள். தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில் 3வது அணி என இருந்ததே கிடையாது. எங்களுடையது மோடிக்கு எதிரான பிரசாரம் தான். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு  அத்தனை வாக்குறுதிகளை மோடி கூறினார். எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்ல. 2 ஆயிரம் போட்டாச்சு என்பது கண்துடைப்பு. எத்தனை பேருக்கு போட்டு இருக்கிறார்கள். போட்டாச்சு என்று சொன்னால் ஆயிரம், 2  ஆயிரம் பேரையாவது காண்பிக்க வேண்டுமில்ல.

மோடி அரசை பொறுத்தவரை சமையல் கியாசுக்கு மானியத்தை மாதம், மாதம் வங்கி கணக்கில் போடுவேன் என்று சொன்னார்கள். எத்தனை பேருக்கு போட்டு இருக்கிறார்கள். எனக்கே இன்னும் வரவில்லை. லஞ்ச  லாவண்யத்தின் உச்சக்கட்டமாக இவர்கள் இப்போது ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மோசமான ஆட்சி மட்டுமல்லாமல் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டிலே லஞ்சம் அதிகமாக இருக்கிறது.ஊழலில் இபிஎஸ், ஓபிஸ் இருவரும் சம அளவில் இருப்பார்கள். அதில் 2 பேரும் கில்லாடிகள் தான். இந்த தடவையும் மக்கள் திருந்தவில்லை என்றால், இனிமேல் தமிழ்நாட்டு மக்களை திருத்தவே முடியாது என்று தான்  அர்த்தம். இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhajah ,Pamaku ,Ilangongan Dhalaladi , 5 Volume , Pamaku, Ilangongan, Dagalladi
× RELATED பாஜவுக்கு செல்கிறேனா? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்