×

172 ரன்னில் சுருண்டது அயர்லாந்து

டேரா டூன்: ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியில், அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி 60 ஓவரில் 172 ரன் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. டாக்ரெல் 39 ரன், ஸ்டர்லிங் 26, கெவின் ஓ பிரையன் 12 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். 11வது வீரராகக் களமிறங்கிய டிம் முர்டாக் 54 ரன் (75 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் யாமின், முகமது நபி தலா 3, ரஷித் கான், வக்கார் சலாம்கெய்ல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான், முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ireland , Ireland ,Afghanistan
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...