×

ஆஸ்திரேலியா தப்ப முயன்றதாக 2016ல் கைது : இலங்கை அகதிகள் உள்பட 19 பேர் விடுதலை

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு கள்ளத்தோணியில் தப்பிச் செல்ல முயன்றதாக கியூ பிரிவு போலீசார் இலங்கை அகதிகள், மார்த்தாண்டம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த யோககுமார் (41), வேலூர் மாவட்டம் மேல்மொனவூர் முகாமை சேர்ந்த பாஸ்கரன் (45) மற்றும் சுற்றுலா பயணிகள் உள்பட 19 பேர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதில், படகு ெகாடுத்து உதவியதாக குமரியை சேர்ந்த மேரிஜான் (34), ஆப்ரகாம் (41) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் தக்கலை பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல், வேலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.  இவ்வழக்கு இரணியல் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.  இந்நிலையில் நேற்று வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 19 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி செல்வநாயகி கண்ணன், குற்றம்சாட்டப்பட்ட 19 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார். இதையடுத்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Australia , Sri Lankan refugees, 19 people released
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது