×

மார்ச் 30 முதல் நாடு முழுவதும் பசுமை பட்டாசு : டெல்லியில் நடந்த கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி:  சுற்றுச்சூழல் பாதிப்படையாதவாறு வரும் 30ம் தேதி முதல் நாடு முழுவதும்  பசுமை பட்டாசு தயாரிக்க பட்டாசு  உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் மத்திய தொழில் துறை அமைச்சக அதிகாரிகள்  கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும்  பட்டாசுகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச  நீதிமன்றம் அதனை வெடிப்பது மற்றும் உற்பத்தி போன்றவற்றில் ஒரு சில  மாற்றங்களை செய்து கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி சில  நிபந்தனைகளுடன் கூடிய தீர்ப்பை வழங்கியது. குறிப்பாக பேரியம் என்ற  மூலப்பொருள் இல்லாமல் பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும் என  குறிப்பிடப்பட்டது.  பேரியம் ரசாயனம் இல்லாமல் பட்டாசு தயாரிக்க முடியாது  என பெசோ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பட்டாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின்  நீதிபதிகள் ஏகே.சிக்ரி மற்றும் அப்துல்நசீர் ஆகியோர் அமர்வு உத்தரவில்,”  பெசோ மற்றும் நீரி அமைப்பால்  தயாரிக்கப்படும் பட்டாசை முழுமையான சோதனைக்கு உட்படுத்தி பின்னர் அது  தொடர்பான புதிய விதிமுறை மற்றும் வரையறைகளை நீதிமன்றத்தில் பிரமாண  பத்திரமாக நீரி அமைப்பு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரட்டிருந்தது.

இந்த நிலையில் டெல்லியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும்  மத்திய தொழில் துறை அமைச்சக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை  கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழகத்தின் சார்பாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்  கூட்டமைப்பின் தலைவர் ராஜா சந்திரசேகர் கலந்து கொண்டார்.

கூட்டத்தின் முடிவில் அவர் கூறியதாவது, கூட்டத்தில் பசுமை பட்டாசு  தயாரிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் வரும் 21ம் தேதி முதல்  அதுகுறித்த பட்டாசு மாதிரிகளை தயாரிக்க மத்திய அரசு தற்போது அனுமதி  அளித்துள்ளது. தொடர்ந்து  மார்ச் 30ம் தேதி முதல் நாடு முழுவதும் பசுமை  பட்டாசு தயாரிப்பு முழுமையாக தொடங்கும்.நீரி அமைப்பின் புதிய  வழிமுறைகளை பின்பற்றி அதன் அடிப்படையில் மட்டுமே இந்த பசுமை பட்டாசுகள்  தயாரிக்கப்படும். இத்தகைய தயாரிப்பு பட்டாசால் சுமார் 30சதவீத மாசு  கட்டுக்குள் கொண்டுவர முடியும். மேலும் உச்ச நீதிமன்றத்தில் பேரியம்  உபயோகித்து பட்டாசு தயாரிப்பதால் மாசு அதிக அளவு ஏற்படுகின்றது என்று தவறான  கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. பேரியம் இல்லாமல் பட்டாசு தயாரிக்கவே இயலாது. இருப்பினும்  நீதிமன்ற உத்தரவின்படி நீரி அமைப்பின் புதிய வழிமுறைகள் மற்றும்  குறியீட்டுடன் இந்த பசுமை பட்டாசு தயாரிக்கப்படும் என அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : country ,meeting ,Delhi , Green Fireworks, Fireworks Manufacturers Associations
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...