×

மக்களவை தேர்தல் 2019: ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் சார்பில் நவாஸ் கனி போட்டி

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் சார்பில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார். எஸ்.டி கூரியர்ஸ் நிறுவனத்தில் தலைவராக இருப்பவர் நவாஸ் கனி என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lok Sabha ,Election ,Nawaz Ghani Contest ,Muslim League ,Ramanathapuram , Lok Sabha election, Ramanathapuram, Muslim League, Nawaz Kani
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...