×

ஒரே தொகுதிகளை பாமக, தேமுதிக கேட்பதால் விஜயகாந்த்துடன் ராமதாஸ் சந்திப்பு

சென்னை: ஒரே தொகுதிகளை பாமக, தேமுதிக கேட்பதால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று சந்தித்து பேசினார்.நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக சார்பில் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேமுதிக சார்பில் சுதீஷ் மற்றும் மாவட்ட செயலாளர்கள், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகம் ஆகியோர்  ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால், தேமுதிகவும், பாமகவும் ஒரே ெதாகுதியை கேட்பதால் யாருக்கு எந்த தொகுதியை வழங்குவது என்று அதிமுக தலைமை முடிவு எடுக்காமல் தவித்தது. ேமலும் அந்த  ஆலோசனை கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ஆகியோர் கலந்து கொள்ளதால் எந்த விதமான முடிவுகள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று திடீரென்று பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்திக்க நேற்று காலை 11.20 மணியளவில் சாலிகிராமத்தில் உள்ள அவரது  இல்லத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் வருவதற்கு முன்பாக 11.10 மணியளவில் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோரும் விஜயகாந்த்தை சந்திக்க வந்தனர். பின்னர்  அனைவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பேசினர். அப்போது தேமுதிக இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் தனது சொந்த தொகுதியான கள்ளக்குறிச்சியில் மீண்டும் போட்டியிடப்போவதாகவும் அதனால் அந்த  தொகுதியை விட்டு தர முடியாது என்று சொன்னதாக கூறப்படுகிறது. மேலும் பாமகவுக்கு செல்வாக்கு உள்ள மற்றொரு தொகுதியும் தேமுதிக கேட்பதால் தொகுதிகளின் பெயர்களை இன்னும் அறிவிக்க முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது.பின்னர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தோம். வேறு ஏதும்பேசவில்லை, தொகுதி பங்கீட்டில் காலதாமதம் என்பது எல்லாகாலத்திலும் இருப்பது தான்  தேமுதிக போட்டியிடும் தொகுதியில் பாமக தேர்தல் பிரச்சாரம் செய்யும். இவ்வாறு ராமதாஸ், அன்புமணி கூறினார்கள்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ramakas ,Vijayakanth , Making, demands, Ramadoss ,Vijayakanth
× RELATED தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது!!