×

சார் முதல் செல்பி வரை கல்லூரி மாணவிகளிடம் லைக்குகளை அள்ளும் ராகுல்

சென்னை: சார் என்று அழைக்க வேண்டாம் என்று கூறியது முதல் செல்பி எடுத்தது   வரை ராகுலின் அனைத்து புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லைக்குளை அள்ளி வருகின்றன. மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று முன்தினம் தமிழ்நாடு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை ஸ்டேல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். ஜீன்ஸ் பேன்ட், டீ சார்ட் அணிந்து  கல்லூரி மாணவர் போல காட்சியளித்த ராகுல் மாணவிகளின் அனைத்து கேள்விகளுக்கும் நேர்த்தியாகவும், தெளிவாகவும் பதில் அளித்தார். இந்நிலையில் மாணவிகளின் கேள்விகளுக்கு ராகுல் பதில் அளித்த வீடியோக்கள் சமூக  வலை தளங்களில் வைரல் ஆகிவருகிறது. குறிப்பாக என்னை சார் என்ற அழைக்க வேண்டாம் ராகுல் என்றே அழையுங்கள் என்று ராகுல் தெரிவித்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.

காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கம் மற்றும் ராகுல் காந்தியின் டிவிட்டர் பக்கங்களில்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோக்களை குறைந்தது 30 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். இறுதியாக மாணவிகளுடன் செல்பி  எடுக்கும் ராகுலின் புகைப்படத்திற்கு டிவிட்டரில் 35 ஆயிரம் லைக்குகளும், இன்ஸ்டாகிராமில் 69 ஆயிரம் லைக்குகளும், பேஸ்புக்கில் 14 ஆயிரம் லைக்குகளும் கிடைத்துள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஸ்டேல்லா மேரீஸ் கல்லூரி மாணவி, ‘இது மிகவும் சிறப்பான கலந்துரையாடல், பதில்கள் அனைத்தும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.  மற்றொரு மாணவி, ‘அவர் கல்லூரி மாணவர் போல் காட்சியளித்ததாகவும், அவருடன் பேசியது நண்பருடன் பேசியது போல் இருந்தது’ என்று கூறினர்.  மேலும் சில மாணவிகள் அவரின் பதில்கள் அனைத்தும் சிறப்பாக  இருந்தாகவும், குறிப்பாக மோடி ஏன் கட்டிபிடித்தீர்கள் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்   தங்களை மிகவும் ஈர்த்ததாகவும் தெரிவித்தனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul ,college students , Sir ,cell phone, Rahul
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...