×

பாரதிராஜா பாணியை கையில் எடுத்த பாஜ

25 மக்களவை தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் கடந்த 2014ல் 23 எம்.பி.க்களை பெற்ற பாஜ. இந்தமுறையும் மொத்தமாக அள்ளிவிட துடிக்கிறது. ஆனால், கடந்த 5 ஆண்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் அதற்கு அணைபோடுகிறது. அப்போது ராஜஸ்தானில் பாஜ ஆட்சி, இப்போது நடப்பதோ காங்கிரஸ் ஆட்சி. சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசை விட அதிக வாக்குகள் பெற்றிருந்தாலும் ஆட்சியை பறிகொடுத்தது பா.ஜ. இப்போது 5 ஆண்டுகால மோடி அரசுக்கு எதிரான மனோநிலையில் மக்கள் உள்ளதால், எப்படியும் இந்தமுறை பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்ற காங்கிரசும் முனைப்பு காட்டிவருகிறது. இந்த நிலையில் சிட்டிங் எம்.பி.க்களிலும் பாதி பேருக்கு சீட் நஹி என்று பாஜ கட்சி மேலிடம் திடீர் முடிவு எடுத்துள்ளது.

மேலும், சினிமா டைரக்டர் பாரதிராஜா சினிமாவில் செய்ததை போன்று, தேர்தலில் புதுமுகங்களை அறிமுகம் செய்ய பாஜ திட்டமிட்டுள்ளது. இந்த டெக்னிக் ரொம்ப பழசு என்றாலும் ஒர்க்அவுட் ஆகிவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அக்கட்சி தலைவர்கள். தங்களுக்கு சீட் கிடைக்காது என்று தெரிந்த சில எம்.பி.க்கள் இப்போதே உள்ளடி வேலைகளில் இறங்க துவங்கிவிட்டனர்.  காங்கிரசுடன் ரகசியமாக கைகோர்க்கும் முடிவில் அவர்கள் இருக்கிறார்களாம். அவர்களை வரவேற்க காங்கிரசும் தயாராகிவிட்டது. சீட் கிடைக்காது என்ற வருத்ததத்தில் உள்ளவர்களுக்கு வலைவீசவே தனி டீம்போட்டு முதல்வர் அசோக் கெலாட் தன் சாணக்கியதனத்தை காட்ட துவங்கிவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhajirajja ,Bhaj , Bharathi Raja, bjp,
× RELATED கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்...