×

கிருஷ்ணகிரி தொகுதியை கேட்டு மல்லுக்கட்டு பாமக, தேமுதிக நெருக்கடியால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி: தேர்தல் பணியில் மந்தம்

கிருஷ்ணகிரி தொகுதியை தங்களுக்கு கேட்டு பாமக, தேமுதிக நெருக்கடி கொடுத்துவருவது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதியில் யார் போட்டியிடுவது என்ற போட்டி எழுந்துள்ளது. பக்கத்து தொகுதியான தர்மபுரியில் பாமக போட்டியிடுவது உறுதியாகி விட்ட நிலையில், கிருஷ்ணகிரி தொகுதியையும் கைப்பற்ற பாமக முடிவு செய்து, காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அதேவேளையில், கிருஷ்ணகிரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென அதிமுக தலைமையிடத்தில், தேமுதிக தவம் கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதிமுக கோட்டையாக உள்ள கிருஷ்ணகிரி தொகுதியை, மீண்டும் அதிமுகவிற்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி, அதிமுக வசமானால் சிட்டிங் எம்.பி. அசோக்குமாருக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், கட்சி தொண்டர்கள் உள்ளனர். இதனால், தொகுதி பங்கீட்டில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, 4 முனை போட்டி நிலவியது. அப்போது, கிருஷ்ணகிரி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி தோல்வியடைந்தார். தற்போது அவரை மீண்டும் போட்டியிட வைக்க, அக்கட்சியின் தலைமை காய் நகர்த்தி வருகிறது. மேலும், கிருஷ்ணகிரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென தேமுதிகவும் கேட்டு வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி தொகுதி மீண்டும் அதிமுகவுக்கு கிடைக்குமா என தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்தல் வேலைகளை செய்ய ஆர்வம் காட்டாமல் மெத்தனமாக இருக்கிறார்கள்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : volunteers ,AIADMK ,Mullukutu Pamaga ,crisis ,Dematriya , Krishnagiri constituency, AIADMK
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு...