×

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா  நேற்று காலை 10.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி, தெய்வானையுடன் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.

நேற்று துவங்கிய பங்குனி திருவிழா வரும் 25ம் தேதி வரை நடைபெறும். ஒவ்வொரு நாளும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் காலையில் தங்கச்சப்பரம், மாலையில் பூத, அன்ன, தங்கமயில், பச்சைக்குதிரை, தங்கக்குதிரை, சேஷ உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். வரும் 22ம் தேதி பட்டாபிஷேகம், 23ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் மதுரை மீனாட்சி, பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் கலந்து கொள்வது வழக்கம்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான  பங்குனி தேரோட்டம் வரும் 24ம் தேதி நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் மாரிமுத்து, கண்காணிப்பாளர் கல்யாணசுந்தரம் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,Tiruparankundram Murugan , Thiruparankundram ,Panguni ,Festival
× RELATED கோயில் திருவிழாவில் இரு...