×

பாம்பன் தூக்குப்பாலத்தில் ஸ்லீப்பர் கட்டைகள் மாற்றும் பணி ஆய்வு

ராமேஸ்வரம் : பாம்பன் தூக்குப்பாலத்தில் ஸ்லீப்பர் கட்டைகள் மாற்றும் பணியை ரயில்வே முதன்மை பொறியாளர் ரவீந்திரபாபு நேற்று ஆய்வு செய்தார்.ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ரயில் பாலத்தில் கப்பல் செல்லும்போது திறக்கும் ஷெர்ஜர் தூக்குப்பாலத்தில் சீரமைப்புக்கு பின் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பாலத்தில் ரயில் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் அவ்வப்போது அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது தூக்குப்பாலத்தில் தண்டவாளம் பொருத்தப்பட்டுள்ள பழைய ஸ்லீப்பர் கட்டைகள் அகற்றப்பட்டு, புதிய ஸ்லீப்பர் கட்டைகளை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நேற்று பாம்பன் வந்த ரயில்வே பாலங்கள் முதன்மை பொறியாளர் ரவீந்திரபாபு ஆய்வு செய்து, பொறியாளர்களிடம் ஆலோசித்தார்.

அந்தரத்தில் ஆபத்து:

alignment=


கடல் நடுவில் அமைந்துள்ள ரயில் பாலத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் உயரத்தில் வேலை செய்யும்போதும், பாலத்திற்கு அடியில் தொங்கிக் கொண்டு வேலை செய்யும்போதும், பாதுகாப்பிற்காக உடலுடன் இணைக்கப்பட்ட பெல்ட் அணிந்து பணியாற்ற வேண்டும். ஆனால் பாம்பன் பாலத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாரும் எவ்வித பாதுகாப்பு அம்சங்களுமின்றி பணி செய்வது வழக்கமாக உள்ளது. நேற்று தூக்குப்பாலத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பாதுகாப்பு பெல்ட் அணியாமல் பாலத்தில் அமர்ந்து வேலை செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lifting , sleepers lambs,Pampan Bridge,rameshwaram,work
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு