×

இணைய வழி கட்டணம் செலுத்தினால் என்ன பயன்?: அறிவிப்பு பலகை வைக்க சார்பதிவாளர்களுக்கு உத்தரவு

சென்னை: இணைய வழி கட்டணம் செலுத்தினால் என்ன நன்மை என்பது குறித்து ெபாதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்தாண்டு பிப்ரவரி 12ம் தேதி முதல் ஆன்லைன் பத்திர பதிவு திட்டம் அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பித்தால் கூட இணையவழியாக பணம் செலுத்துவதை பொதுமக்கள் தவிர்த்து வந்தனர். மேலும், சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் ரொக்கமாகவும், வரைவோலையாகவும் பெறப்பட்டது. இதனால், கணக்கில் வராத பணத்தின் புழக்கத்தை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து சார்பதிவாளர்அலுவலகங்களில் பணமில்லாத பரிவர்த்தனை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி இணையவழி கட்டணம் செலுத்த முடியும். மேலும், வில்லங்க சான்று, திருமண சான்று, சீட்டு பதிவிற்கு வருபவர்கள் கூட சார்பதிவாளர் அலுவலகங்களில் எஸ்பிஐ வங்கிகள் மூலம் தரப்பட்டுள்ள பிஓஎஸ் கருவிகள் மூலம் கட்டணம் செலுத்தி கொள்ளலாம்.

இந்த நிலையில், பொதுமக்களிடம் இணைய வழி கட்டணம் செலுத்தும் முறை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  சார்பதிவாளர் அலுவலகங்களில் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அறிவிப்பு பலகை வைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த அறிவிப்பு பலகயைில், எஸ்பிஐ வங்கியை ஒருங்கிணைப்பாளராக கொண்ட புதிய எளிமையாக்கப்பட்ட இணைய வழி கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அனைத்து வங்கிகளின் இணைய வழி சேவை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஒருங்கிணைந்த கட்டண முகப்பு (யூபிஐ) ஆகியவற்றை பயன்படுத்தி பதிவுத்துறை கட்டணம் செலுத்துவதோடு கீழ்க்கண்ட நன்மைகளை பெற்று மகிழுங்கள். அதாவது, 24 மணி நேரமும் பணம் செலுத்தும் வசதி, விரைவாக பணம் செலுத்துதல் மற்றும் உடனடி ரசீது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பணம் செலுத்த கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும். வரைவோலை தரகு கட்டணத்தை தவிர்க்கலாம் என்று அந்த அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : respondents , Internet payment
× RELATED 42 விவசாய சங்கங்கள் எதிர்மனுதாரராக சேர்ப்பு