போதையில் தெலுங்கு நடிகர் மீது தாக்குதல் நடிகர் விமல் மீது வழக்கு பதிவு

சென்னை: குடிபோதையில் தெலுங்கு நடிகரை தாக்கிய களவாணி பட கதாநாயகன் விமல் மற்றும் நண்பர்கள் மீது போலீசார் 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பெங்களூரை சேர்ந்தவர் அபிஷேக்  திரைப்பட நடிகரான இவர் கடந்த 2 வாரமாக விருகம்பாக்கத்தில் உள்ள சர்வீஸ் அபார்ட்மென்ட்டில்  தங்கி அவன் அவள் அது என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் சர்வீஸ் அபார்ட்மெண்ட் வளாகத்தில் அமர்ந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த தெலுங்கு நடிகரை குடிபோதையில் வந்த, களவாணி பட கதாநாயகன் விமல், மற்றும் அவருடைய நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து அவரிடம் தகராறு செய்துள்ளனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு வலது கண்,நெற்றி, இடது கை மற்றும் வலது கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடுதிரும்பினார். அவர்கள் எதற்காக தாக்கினார்கள் என்று தெரியாத அவர் மீண்டும் அவர்களால் பிரச்சனை ஏதும் வரக்கூடாது என்று இது தொடர்பாக தெலுங்கு நடிகர் அபிஷேக் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More