×

18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 13ம் தேதி விருப்பமனு அளிக்கலாம்: அதிமுக அறிவிப்பு

சென்னை: 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 13ம் தேதி விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக அறிவித்துள்ளது. விருப்பமனு பெறுவதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.25,000 செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 13ம் தேதி காலை 10 மணி முதல் விருப்பமனு பெற்று பூர்த்தி செய்து அன்று மாலைக்குள் தர வேண்டும் என தெரிவித்துள்ளது. திருவாரூர் தொகுதிக்கு ஏற்கனவே விருப்பமனு பெறப்பட்டுள்ளதால் அதற்கு விருப்பமனு அளிக்க தேவையில்லை என தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : by-elections ,constituencies ,AIADMK , 18 constituencies, by-elections, electorate, AIADMK
× RELATED சம்பளம் கொடுக்க வழியில்லை விற்பனைக்கு வரும் கோயில் விளக்குகள்