×

18 தொகுதிகளுடன் மீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும் :திமுக கூட்டத்தில் தீர்மானம்

சென்னை : 18 தொகுதிகளுடன் மீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும் என சென்னையில் ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் முறையிடப்படும் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர், எம்எல்ஏ, எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஸ்டாலின் தலைமையில்  திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

நாடாளுமன்றம், காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது அவை எந்த தொகுதி என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்ற விவரம் இன்று அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

18 தொகுதிகளுக்கு மட்டுமே  இடைத்தேர்தல் என அறிவிப்பு

மக்களவை தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே  இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் அதிரடியாக நேற்று அறிவித்தது.  ஒட்டப்பிடாரம்,  அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான வழக்கு  நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதால் அந்த 3 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறவில்லை.

செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்


இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் 3 தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாட திமுக சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மக்களவை தேர்தலுடனேயே சேர்த்து தேர்தல் நடத்திட வேண்டும் என்று ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் : திமுக


மேலும் 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன் வராவிட்டால், நீதிமன்றம் மூலம் 3 தொகுதிகளின் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் எல்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உயர்நீதிமன்ற தீர்ப்பால் இறுதிக்கு வந்துவிட்டது என்றும் அந்த இரண்டு தொகுதி தொடர்பான வேறு வழக்குகளிலும் தேர்தலை நடத்தக் கூடாது என எந்த உத்தரவும் இல்லை என்றும் 3 தொகுதிகளில் தேர்தல் நடத்தாததற்கு கூறும்காரணங்கள் அடிப்படை ஆதாரமற்றது என்றும் திமுக சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் ஒரு ஆட்சியை மைனாரிட்டி அந்தஸ்தில் தொடர அனுமதிப்பதா என்றும் திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituencies ,DMK , Court, DMK, Stalin, Secretaries, Resolution
× RELATED அதிமுகவில் சென்னை மண்டலத்தை சேர்ந்த 15...