×

அதிக குற்றம் நடக்கும் இடங்களை ஜிஐஎஸ் முறையில் இணைக்க திட்டம்: பெண்கள் சென்றால் அலாரம் அடிக்கும்

சென்னை: சென்னை மாநகராட்சியில் குற்றம் அதிகம் நடைபெறும் இடங்களை ஜிஐஎஸ் முறையில் இணைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த இடங்களுக்கு பெண்கள் சென்றால் அலாரம்  அடிக்கும் வகையில் செயலி ஒன்றை வடிவமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிர்பயா திட்டத்தின் சென்னையை பாதுகாப்பான நகரமாக மாற்ற ₹450 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் மாநில அரசு 40 சதவீதம் தொகையும், மத்திய அரசு 60  சதவீதம் தொகையும் வழங்கும். இந்த திட்டத்தின் கீழ் அவசர கால கம்பங்கள், அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி வசதி, மொபைல் கழிவறை, பெண்கள் பாதுகாப்பு படை, அவசர கால தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படவுள்ளன.  மாநகராட்சி, காவல் துறை, போக்குவரத்து ஆகிய மூன்று துறைகள் இணைந்து திட்டத்தை செயல்படுத்த உள்ளன. இந்நிலையில் முதற்கட்டமாக சென்னையில் குற்றம் அதிகமாக நடைபெறும் இடங்களை கண்டறிய முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக காவல் துறை அளித்த அறிக்கையில் சென்னையில் 617 இடங்கள் குற்றம் அதிகம் நடைபெறும் இடங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கோயம்பேடு பேருந்து  நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகியவைகளும் அடங்கும். இந்நிலையில் இந்த 617 இடங்களை ஜிஐஎஸ் முறையில் இணைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த 617 இடங்களும் கூகுள் மேப்பில் இணைக்கப்படும். மேலும் இதற்காக தயார் செய்யப்படவுள்ள  செயலியிலும் இந்த இடங்கள் இணைக்கப்படும். பொது மக்கள் பெண்கள் அந்த இடங்களில் நுழைந்தால் அலராம் அடிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : women ,GIS , High crime ,connect , GIS,alarm
× RELATED தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து...